Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 6 மே, 2020

தாயகம் திரும்ப 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் விண்ணப்பம்.!

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பி வர 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழகர்கள் விண்ணப்பித்துள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பி வர 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழகர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து அதிக அளவிலான தமிழர்கள் சொந்த நாடான தமிழகத்துக்கு திரும்ப விண்ணப்பித்துள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், ஐரோப்பியா உள்ளிட்ட சுமார் 100 நாடுகளிலிருந்து தமிழகம் திரும்பி வர விண்ணப்பித்துள்ளார்கள் என தெரிவித்துள்ளனர்.

இதனிடையே முதல்கட்டமாக மலேசியாவில் இருந்து வரும் 8 ஆம் தேதி 200 பேர் விமானத்தில் தமிழகம் அழைத்துவரப்படுகின்றனர். பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கப்பல் மூலமாகவும் இந்தியர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளி நாடுகளில் இருந்து அழைத்து வரப்படுவோர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தாயகம் திரும்ப விரும்புவோர் மத்திய அரசு நிர்ணயித்த விமான கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் தனியார் ஹோட்டல்களில் தங்க விரும்புவோர் அதற்கான கட்டணத்தை தாங்களே செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர். மேலும் தமிழகத்துக்கு வருவோர் அரசு மையங்களில் தங்குவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!