Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 6 மே, 2020

ராயல் என்பீல்டு : மாற்றியமைக்கப்பட்ட இன்டெர்செப்டர் 650 மாடல் பற்றிய குறுந்தொகுப்பு.!

இந்தியாவில் பெரும்பாலான இளைஞர்களின் கனவு வாகனமாக இருக்கிறது ராயல் என்பீல்டு.  இந்த நிறுவனத்தில் இருந்து கடந்த 2018 ஆம் ஆண்டு இறுதியில் வெளியான மாடல் தான் ராயல் என்பீல்டு இன்டெர்செப்டர் 650ஆகும். இதன் கஷ்டமயிஸ்ட்டு மாடல் ( தோற்றத்தில் சில மாறுபாடுகள் ) பற்றிய சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

ராயல் என்பீல்டு நிறுவனத்தால் 2018 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியான இன்டெர்செப்டர் 650 என்கிற மடலை அறிமுகப்படுத்தியது. இந்த மாடல் மற்றும் காண்டினெண்டல் ஜிடி 650 என இந்த இரு இரட்டை மாடல்களும் கடந்த 2019 -2020 ஆம் வர்த்தக ஆண்டில் இதுவரை 20,000 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.  

இதில் இன்டெர்செப்டர் 650 பைக்குகளை தாய்லாந்து நாட்டில் உள்ள ரேஞ்சர் கோர்ட் கஷ்டமயிஸ்ட்டு நிறுவனம் ரீ-மாடல் செய்து தோற்றத்தில் பல மாறுதல்களை செய்துள்ளது, அதில், முக்கியமாகா முன்புறம் இரட்டை விளக்குகளை அமைந்துளளது. அதன் பின் ஹேண்டில் பார் மாற்றியமைக்கப்பட்டுளது. சீட் குறுகலாக அமைத்து, அதன் பெண்டிங் வித்தியாமாசாக அமைக்கப்பட்டுளது.

அதன் பின்னர் டேங்க், எஞ்சின் மேல்புறம், குறுகலான எக்ஸ்சாஸ்ட் முனை, ஆன் ரோடு, ஆஃப் ரோடு பயணத்திற்கு ஏற்றாற்போல டையர் என அனைத்தும் மாற்றப்பட்டு இளைஞர்களை வெகுவாக கவரும் வண்ணம் உள்ளது. 

மற்றப்படி இந்த மாடலின் என்ஜின் அமைப்பில் எந்தஒரு  மாற்றமும் செயல்படுத்தபடவில்லை. இதனால் வழக்கமான 648cc, இணையான இரட்டை-சிலிண்டர் என்ஜின் தான் 270-கோண ஃபைரிங் ஆர்டரில் இந்த கஸ்டமைஸ்ட் இண்டர்செப்டர் 650 மாடலில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 47 பிஎச்பி பவரையும், 52nm டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக