வாய்ப்பு கிடைத்தால் ஆக்ரோஷமான வேகமான பந்து வீச்சாளர்களை உருவாக்குவேன் என வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
பாக்கிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தர், வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக வருவேன் என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து இணையத்தில் நேர்காணலில் பேசிய அவர், வாய்ப்பு கிடைத்தால் ஆக்ரோஷமான மற்றும் வேகமான பந்து வீச்சாளர்களை உருவாக்குவேன் என்றும் இந்திய அணிக்கு பயிற்சியாளராக ஆவதற்கு ஆர்வமாகவும், தனது விருப்பமாகவும் உள்ளது.
இதையடுத்து எதிர்காலத்தில் இந்திய பந்துவீச்சு பிரிவுடன் தொடர்புகொள்ள விரும்புகிறீர்களா என்ற கேள்விக்கு, நான் நிச்சியம் செய்வேன் என்றும் அறிவை பரப்புவது எனது வேலை என எதிர்மறையான பதிலை கூறியுள்ளார். பின்னர் நான் என்ன கற்றுக்கொண்டேனோ அதை கற்றுக்கொடுப்பேன் எனவும் தெரிவித்துள்ளார். தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளராக பாரத் அருண் இருந்து வருகிறார். அந்த பணியை தான் அக்தர் விரும்புவதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக தற்போதைய வீரர்களை காட்டிலும் மிக ஆக்ரோஷமான வேகம் நிறைந்த மற்றும் அதிகம் பேசக்கூடிய பந்து வீச்சாளர்களை உருவாக்குவேன் என்றும் நம்பிக்கை அளித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக