கடல் உணவுகள் என்றாலே பிடிக்காதவர்கள் சொற்பம் தான். ஏனென்றால் அதிகப்படியான சத்துகளும், சுவையும் அதில் தான் அடங்கியுள்ளது. மேலும், கடலில் உள்ள இறால் சுவையை அடித்துக்கொள்ள எந்த உணவாலும் முடியாது என்றே சொல்லலாம். இந்த இறாலை வறுவல் செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
- இறால்
- எண்ணெய்
- இஞ்சி பூண்டு விழுது
- மஞ்சள் தூள்
- மிளகாய் தூள்
- உப்பு
- கடுகு
- கறிவேப்பில்லை
- சின்ன வெங்காயம்
செய்முறை
முதலில் இறாலை தோலுரித்து கழுவி வைத்து கொள்ளவும். அதன் பிறகு ஒரு சட்டியில், இறாலுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு லேசாக சேர்த்து பிரட்டி 20 நிமிடம் வைத்து கொள்ளவும்.
அதன் பிறகு ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு கறிவேப்பிலை போட்டு தாளித்து சின்ன வெங்காயத்தை சேர்க்கவும். அதன் பிறகு நாம் பிரட்டி வைத்துள்ள இறால் கலவையை அதனுடன் சேர்த்து அவிந்ததும் இறக்கி பரிமாறினாள் அட்டகாசமான இறால் வறுவல் தயார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக