Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 5 மே, 2020

மே 8: இந்தியாவில் 108எம்பி கேமராவுடன் களமிறங்கும் சியோமி மி 10.!

சியோமி நிறுவனம் தனது புதிய சியோமி மி 10 ஸ்மார்ட்போன் மாடலை வரும் மே 8-ம் தேதி அறிமுபம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அமேசான் வலைதளம் மூலம் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன, அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

வெளிவரும் சியோமி மி 10 ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED HDR+ டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 19:5:9 என்ற திரைவிகிதம், 1,200 nits of peak brightness உள்ளிட்ட ஆதரவுகளுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சியோமி மி 10 ஸ்மார்ட்போன் ஆனது 2.84ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865எஸ்ஒசி பிராசஸர் உடன் அட்ரினோ 650ஜிபியு ஆதரவு உள்ளது, எனவே இயக்கத்திற்கு அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி மெயின் கேமரா + 13எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்+ 2எம்பி மேக்ரோ லென்ஸ்+2எம்பி

டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 20எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ்,

செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

சியோமி மி 10 ஸ்மார்ட்போனில் 4780எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, மேலும் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளதால் இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

சியோமி மி 10 ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி/512ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் புளூடூத்,வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன். பின்பு ரூ.42,400-விலையில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!