Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 7 மே, 2020

ரூ. 95.12 லட்சம் ஆரம்ப விலையில் 2020 Jaguar F-Type கார் விற்பனைக்கு அறிமுகம்..!

கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் ஜாகுவார் நிறுவனம் காட்சிக்கு கொண்டுவந்த எஃப்-டைப் ஃபேஸ்லிஃப்ட் கார் தற்போது ரூ. 95.12 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை முன்னிட்டு இந்த காரினுடைய அறிமுக நிகழ்வு பிரமாண்டமாக நடத்தப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

2020 ஜாகுவார் எஃப்-டைப் காரினுடைய கட்டமைப்புகள் பலவும் முந்தைய மாடலை பின்பற்றியே உருவாக்கப்பட்டுள்ளன. எனினும், குறிப்பிட்ட சில கட்டமைப்புகள் புதியதாக இடம்பெற்றுள்ளதை கவனிக்க முடிகிறது. நீளமாகவும், அகலமான தோற்றத்திலும் சிறப்பான பரிமாணங்களை இந்த கார் பெற்றுள்ளது.

புதிய ஜாகுவார் எஃப்-டைப் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வி-6 எஞ்சின் வெர்ஷன் உள்ளது. அதன்படி, இந்த கார் 2.0 லிட்டர், 4 சிலிண்டர், டர்போ-பெட்ரோல் எஞ்சின் மற்றும் 5.0 லிட்டர், சூப்பர்சார்ஜிடு வி8 பெட்ரோல் எஞ்சின் ஆகிய இரண்டு தேர்வுகளில் விற்பனைக்கு கிடைக்கிறது.

இதில் 2.0 லிட்டர் பெட்ரோல் மாடல் 300 பிஎச்பி பவர் மற்றும் 400 என்.எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும். அதேபோல 5.0 லிட்டர் சூப்பர்சார்ஜிடு வி8 பெட்ரோல் மாடல் 450 பிஎச்பி பவர் மற்றும் 575 பிஎச்பி ஆற்றல்களை வெளிப்படுத்தும் என ஜாகுவார் தெரிவித்துள்ளது.

மேலும் பின் சக்கர ட்ரைவிங்கை வழங்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் மாடல் துவக்க நிலையில் இருந்து 100 கி.மீ வேகத்தை 5.7 விநாடிகளில் அடைந்துவிடும். இதனுடைய அதிகப்பட்சம் வேகம் மணிக்கு 250 கி.மீ ஆகும். ஆனால் இதனுடைய மற்றொரு எஞ்சின் மாடல் 2 பிஎச்பி பவர்களுக்கு ஏற்றவாறு ஆற்றல்களை வழங்குகிறது.

2020 ஜாகுவார் எஃப்-டைப் வேரியன்ட் வாரியாக விலை பட்டியல்:

வேரியன்டுகள்விலை
2.0 Coupe P300ரூ. 95.12 லட்சம்
2.0 Coupe R-Dynamic P300ரூ. 98.13 லட்சம்
2.0 Coupe First Edition P300ரூ. 1.01 கோடி
2.0 Coupe R-Dynamic P300ரூ. 1.06 கோடி
5.0 V8 Coupe R-Dynamic P540ரூ. 1.26 கோடி
5.0 V8 Coupe First Edition P450ரூ. 1.29 கோடி
5.0 V8 Convertible R-Dynamic P450ரூ. 1.35 கோடி
5.0 V8 V8 Coupe AWD R P575ரூ. 2.27 கோடி
5.0 V8 Convertible AWD R P575ரூ. 2.42 கோடி
*இங்கு குறிப்பிடப்பட்டுள்ள விலை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, 5.0 லிட்டர், சூப்பர்சார்ஜிடு, வி8 பெட்ரோல் எஞ்சின் மாடலில் 450 பிஎச்பி
பவரை வெளிப்படுத்தும் வேரியன்ட் துவக்க நிலையில் இருந்து 100 கி.மீ வேகத்தை 4.6 விநாடிகளில் அடைந்துவிடும். இது மணிக்கு 285 கி.மீ வேகத்தில் செல்லும்.

அதுவே 575 பிஎச்பி பவர் வெளிப்படுத்தும் வேரியன்ட் மாடல் துவக்க நிலையில் இருந்து 100 கி.மீ வேகத்தை 3.7 விநாடிகளிலேயே அடைந்துவிடும் ஆற்றல் பெற்றது. இது மணிக்கு 300 கி.மீ வேகத்தில் செல்லும்.

ஃபேஸ்லிஃப்ட் மாடல் என்பதால் புதிய ஜாகுவார் எஃப்-டைப் மாடலின் முன்புறத்தில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கூர்மையான பெரிய கிரில் அமைப்பு, ஸ்போர்டியான தோற்றம் கொண்ட பம்பர், ஆங்கில எழுத்தான ’J’ வடிவில் எல்.இ.டி முகப்பு விளக்குகள், மெலிதான எல்.இ.டி பின்பக்க விளக்குகள் போன்றவை இடம்பெற்றுள்ளது.

எனினும், காரினுடைய பக்கவாட்டு பகுதி முந்தைய மாடல் தோற்றத்திலேயே தொடர்கிறது. இதன்மூலமாக முந்தைய வெர்ஷனில் காணப்பட்ட பல்வேறு அம்சங்கள் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலில் தொடர்கின்றன. பெரியளவிலான மாற்றங்களுக்கு இந்த கார் உட்படுத்தப்படவில்லை என்பதை காணமுடிகிறது.

அதேபோல காரின் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் மூலமாக நாவிகேஷன், 3டி பரிமாணத்தில் மேப்புகளை கையாளும் வசதி, கஸ்டம் திரை கன்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளை ஓட்டுநர் பெறலாம்.

2020 ஜாகுவார் எஃப்-டைப் ஃபேஸ்லிஃப்ட் மாடல் 9 வேரியன்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். இதில் முக்கிய பாதுகாப்பு அம்சங்களுடம் ஓட்டுநர் கன்டிஷன் மானிட்டரிங் கருவி, லேன் கீப் அசிஸ்ட் போன்ற மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு கட்டமைப்புகள் உள்ளன. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் விலகிய பிறகு இந்த காருக்கான டெலிவிரி தொடங்கும் என தெரிகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக