Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 7 மே, 2020

இனி ஏடிஎம் போகாமலே பணம் எடுக்கலாம்!

கொரோனா கொள்ளை நோய் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. எனினும், மக்கள் தேவைக்கு பணம் எடுக்க ஏடிஎம்கள் இயங்கி வருகின்றன. ஏடிஎம்களில் மக்கள் கூட்டத்தை தவிர்க்கவும், தனிமனித இடைவெளியை உறுதிசெய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனினும் மக்கள் நடமாட்டம் ஏடிஎம்களில் அதிகம் என்பதால் தயக்கத்தை தவிர்க்க முடிவதில்லை.


இந்த சேவைக்காக ரிசர்வ் வங்கியிடம் கூடுதல் அனுமதி பெறத்தேவையில்லை. மூன்றாம் அடுக்கு, நான்காம் அடுக்கு நகரங்களில் ஒரு நாளைக்கு பணம் எடுப்பதற்கான வரம்பு ரூ.2000ஆகவும், முதல் அடுக்கு பெருநகரங்களில் ரூ.1000ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மே 5ஆம் தேதியன்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

பணம் எடுப்பதற்கு ஒரு விழுக்காட்டுக்கு மேல் கட்டணம் வசூலிக்கக்கூடாது எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பணம் விநியோகிக்க வர்த்தகர்களுக்கு வங்கிகள் அனுமதியளிக்கலாம் என ரிசர்வ் வங்கி ஏற்கெனவே தெரிவித்துள்ளது. மேலும், டெபிட் கார்டுகளை பயன்படுத்தி ஸ்வைப்பிங் மெஷின்கள் உள்ள இடங்களில் பணம் பெற்றுக்கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதியளித்துள்ளது.

தற்போது கூடுதலாக யூபிஐ (UPI)சேவைகளை பயன்படுத்தியும் வர்த்தகர்களிடம் பணம் பெற்றுக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. எனினும், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுக்க முடியாது என ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக