Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 5 மே, 2020

இன்று விற்பனைக்கு வரும் ரெட்மி நோட் 9ப்ரோ ஸ்மார்ட்போன்.! விலை இவ்வளவு தான்.!

சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 9ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை இன்று மதியம் 12மணி அளவில் அமேசான்,மி.காம் போன்ற தளங்களில் விற்பனைக்கு கொண்டுவருகிறது, மேலும் இந்தியா முழுவதும் பசுமை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் குறிப்பிட்ட விதிமுறைகளில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நீங்கள் சிவப்பு மண்டலத்தில் இருந்தால், இந்த ஸ்மார்ட்போனுக்கு நீங்கள் சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடலை தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால், ரூ.1000-வரை தள்ளுபடியை பெறலாம். பின்பு இப்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.67-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 x2400 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதி, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 உடன் MIUI 11 ஆதரவுஇருப்பதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார்+ 8எம்பி செகன்டரி சென்சார் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் பல ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.குறிப்பாக வெள்ளை, கருப்பு,வெள்ளை உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும்.

ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5020எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,மேலும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல், எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.

புளூடூத்,என்எப்சி, வைஃபை 802.11,யூ.எஸ்.பி டைப்-சி, 3.5மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் மேலும் இந்த சாதனங்களின் விலை மதிப்பு(இந்திய மதிப்பில்) 4ஜிபி ரேம் கொண்ட ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் விலை ரூ.13,999-ஆக உள்ளது, பின்பு 6ஜிபி ரேம் கொண்ட ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் விலை ரூ.16,999-ஆக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக