காம கொடூரன் காசி எதையெல்லாமோ காட்டி பெண்களின் வாழ்க்கையை சீரழித்தார் என்பதை ஏமாற்றப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.
காசியுடன் அரசியல் பிரமுகர்கள், விஐபிக்கள் நெருக்கமான தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
காசியை இந்த 3 நாளில் போலீசார் விசாரிக்க போகிறார்களாம். அதனால் காசியுடன் நெருக்கத்தில் இருந்த அரசியல் புள்ளிகளுக்கு அடிவயிற்றில் கலக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு புறம் கூறப்படுகின்றது.
நாகர்கோயில் காசி படித்து முடித்துவிட்டு தன்னுடைய அப்பாவின் கோழிப்பண்ணையை கவனித்து வந்துள்ளார்.
சுஜி என்ற பெயரும் உண்டு. 26 வயசுதான். சின்ன வயசில் இருந்தே ஆடம்பர வாழ்க்கை இவருக்கு தானாக அமைந்தது.
இப்போது அவரால் ஏமாற்றப்பட்ட பெண்கள் ஒவ்வொருவராக புகார் தர ஆரம்பித்துள்ளனர்.
படிக்கிற காலத்தில் இருந்தே பெண்களை மயக்கி, ஏமாற்றி தன் வலையில் விழ வைத்து, அந்த ஆபாச வீடியோவை காட்டியே லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளார்.
4 மாடிக்கு வீடு கட்டி உள்ளார். நிறைய சொத்துக்களை வாங்கி போட்டுள்ளார்.
முதன்முதலில் காசியால் ஏமாற்றப்பட்ட ஒரு பெண் டாக்டர் புகார் தரவும்தான் விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. ஜிம் பாடி போட்டோக்களை காட்டி காட்டியே ஏகப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை விழ வைத்துள்ளார்.
பெண்ணியம் கருத்துக்களை சொல்லி டிக்டாக் வீடியோவும் பதிவிட, அதன்மூலமும் பல பெண்கள் விழுந்துள்ளனர்.
"காசிக்கு பெரிய கும்பலுடன் தொடர்பு இருக்கு. அவங்களை விட்டுடாதீங்க.." என்பதுதான் புகார் சொல்லும் பெண்களின் குரலாக உள்ளது.
இவர்கள் எல்லாம் யார் என்று தெரியவில்லை. ஏற்கனவே அரசியல் பிரமுகர்களுடன் காசிக்கு தொடர்பு இருப்பதாக சொல்லப்பட்டது.
பாண்டிச்சேரி, சென்னை அருகே அவர்களுக்கு சொந்தமாக ரிசார்ட், ஹோட்டல்கள் இருப்பதாகவும், ஏமாற்ற போகும் பெண்களை அந்த ரிசார்ட்டுகளுக்குதான் காசி அழைத்து வந்து நாசம் செய்திருப்பதாகவும் செய்திகள் கசிந்தன.
ஆனால் அந்த கட்சி பிரமுகர்கள் யார் என்றெல்லாம் இன்னும் உறுதியாக தெரியவில்லை.
காசிக்கு வயது 26தான் ஆகிறது.. அதற்குள் இத்தனை விஐபிக்களுடன் தொடர்பா? இவ்வளவு சொத்துக்களை வாங்கி குவிக்க முடியுமா என்பது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக