Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 29 மே, 2020

ஏலியன்ஸ் ஏன் நம்மை தாக்குவதில்லை? தாக்கினால் என்னவாகும்? : Aliens Tamil 09




போன பதிவில், தியரி ஒஃப் ரிலேட்டிவிடிபற்றி அறிந்ததை எழுதி இருந்தேன்…
அந்த வேகத்தை அடைந்தால் என்ன பிரச்சனைகள் எழும் என்பதையும்… ஏற்கனவே குறிப்பிட்ட சில சம்பவங்களில் ஏலியன்ஸ் தோன்றியதற்கு காரணம் என்ன என்பதையும் இன்று எழுதுகிறேன்…
——————————————————————————————
ஏற்கனவே… கடந்த பதிவொன்றில்… செப்டொம்பர் 11 அமெரிக்காவின் டுவின்ஸ்டவர் தாக்கி அழிக்கப்பட்ட போது…
அதன் பின் புற வானத்தில் ஒரு பறக்கும்தட்டு நிற்பது போன்ற படத்தை போட்டிருந்தேன்…
அது ஏன் என்பதை பார்ப்போம்…
எனது தாத்தாவிலிருந்து அப்பாவும்… அப்பாவிலிருந்து நானும்… என்னிலிருந்து அடுத்த சந்ததியும் உருவாகப்போகிறது…
இதில்… ஒரால் அழிந்தாலும்… எதிர்காலத்தில் மாற்றம் வரும்…
ஒரு அடியில் இருந்து பல பேர் உருவாகி இருப்பார்கள்… ஆகவே பெரிய மாற்றம் நிகழும் எதிர்காலத்தில்… உதாரணமாக, ஜித் என்பவருக்கு 5 பிள்ளைகள் என்றால்… 5 பிள்ளைகளுக்கும் ஒராலுக்கு 2,3 பிள்ளைகள் பிறக்கும்… 3ம் தலை முறை 10,15 ஆகும் நான்காவது 20,30 ஆகும்… இப்படியே அதிகரிக்கும்… இதில் ஜித் இல்லை என்றால் பின்னால் ஒன்றுமே இருந்திருக்காது/ உருவாகி இருக்காது…
இதை இங்கு சொன்னதற்கு காரணம்…
ஏலியன்ஸின் வருகைகளால் இது வரைக்கும் எம்மில் இழப்பு ஏற்படவில்லை என்பதை நாங்கள் ஜோசிக்க வேண்டும்…
( ஒரேயடியாக காணாமல் போன இராணுவ வீரர்கள்… அது போன்ற சில சம்பவங்கள் தவிர்து… அதுக்கு ஏலியன்ஸ்காரண்மில்லை என்று ஏற்கனவே மாற்றுலக கொள்கைமூலம் எழுதியிருக்கிறேன்.)
இதுகூட அவர்கள் நம் எதிர்காலத்தவராக இருக்கலாம் என்பதற்கு சான்றுதான்.
மாறாக அவர்கள்… எம்மை அழித்தார்களானால்… இழப்பு அவர்களிலேயே ஏற்படும்… ( இதுக்கு மேல சொல்லத்தெரியல… )
அதனால்தான் அவர்கள் எம்மை கண்கானிப்பதிலும்… எமக்குத்தெரியாமல் சில ஆராச்சிகளை செய்துவிட்டு போவதாகவும் இருகலாம். ( இப்போது இருக்கும் நாமது உருவ,உடலமைப்பு தேவைப்பட்டதால்த்தான்… ஏற்கனவே சொன்ன சம்பவத்தில் அந்த பெண்ணுக்கு கர்ப்பமுண்டாக்கி… கருவை 7 மாதத்திலேயே கொண்டுபோனார்களாகவும் இருக்கலாம்.)
இப்போது விளங்கி இருக்கும்… டிவின்ஸ்டவர் சம்பவத்தில் பறக்கும் தட்டு நின்டமைக்கான காரணம்…
எமக்கு ராஜராஜ சோழரின் படையெடுப்பை பற்றி தெரிந்திருக்கிறது… பார்க்க ஆசை இருக்கிறது… ஆனால், பின்னால் சென்று பார்க்க முடியாது…
ஆனால், எதிர்காலத்தில் அதீதவேகங்கள் சாத்தியமாகும் போது… பின்னோக்கி பயணிப்பதும் சாத்தியமாகும். அப்போதும்… அதே ஆசைகள் இருக்கத்தான் செய்யும்… அதன்டிப்படையில்… 2001 செப்டொம்பர் 11 இல் என்ன நடந்தது என்பதை கண்கானிப்பதற்காக வந்திருந்திருக்கலாம்.
ஆனால், தடுக்க முடியாது… தடுத்தால்… அழிவது அவர்களாக கூட இருக்கலாம்…
அந்த பில்டிங்கில் இருந்தவர்கள் இருந்திருப்பின்… திருமண பந்தங்கள் மூலம் எதிர்காலம் மாறி இருக்கும்…
பறக்கும் தட்டில் வந்தவர்களே உருவாகாமல் இருந்திருக்கவும் வாய்ப்புள்ளதே…
——————————————————————————————
இதேகாரணத்துக்காத்தான்… ஏற்கனவே சொன்ன சம்பவத்தில்… 2ம் உலக யுத்தத்தில்… விமானத்தை பிந்தொடர்ந்ததுக்கு காரணமாக இருக்கலாம். அதிலும்… அவர்கள் ஒரு மிரட்டலை மட்டுமே கையாண்டார்கள்…
ஏன் அந்த மிரடல் என்பது தெரியவில்லை… யுத்தத்தை தடுக்கும் நோக்கமில்லை…
( அன்று ஏற்படுத்தப்பட்ட அந்த மிரட்டல்… இன்று என்னையும் உங்களையும் அதை பற்றி பேச வைத்துள்ளது… அப்படியானால்… இது திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டதா???? ஏன்???… எனக்குத்தெரியாது… )
——————————————————————————————
அவர்கள், எமக்கு தொழில் நுட்பத்தை கற்றுத்தருவதில்லை… அதற்கு காரணமும்… ஏற்கனவே சொன்ன காரணங்கள்தான்… அவர்கள் இல்லாமல் போக அதே வழிவகுத்துவிடும்…
——————————————————————————————
இங்கு… ஒரு சைன்ஸ்ஃபிக்ஷன் சிறுகதை நினைவு வருகிறது ( சுயாத்தாவினதாக இருக்கலாம்)… தெவைப்பட்டால்… அதை ஒரு பதிவாக இடுகிறான். :)
சிபி கேட்டபடி… உடைந்ததை ஒட்ட வைக்க முடியுமா? என்பதற்கு வரும் பதிவுகளில் பதில் தருகிறேன்.
——————————————————————————————
அப்படி இருந்தாலும்…
எகிப்திய பிரமிட்டோவியங்களில்… ஏலியன்ஸ் உதவுவது போன்று வரையப்பட்டது ஏன்?
எகிப்தில் இருந்த… நட்சத்திர வட்டத்தை எவ்வாறு கச்சிதமாக உருவாக்கினார்கள்?
மற்றும் தற்போதைய விஞ்ஞான உலகம் கண்டு கொண்ட உண்மைகள்… சில பழங்குடி மக்களிடையே ஏற்கனவே பழக்கத்திலிருந்தது எப்படி?
மற்றும்… பல தகவல்களுடன் அடுத்த பதிவில் சந்திப்போம்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக