Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 29 மே, 2020

சுவையான வாழைக்காய் பொரியல் செய்வது எப்படி?

சுவையான வாழைக்காய் பொரியல் செய்யும் முறை. 

நம்மில் சிறியவர்கள்  பெரியவர்கள் வரை அனைவருமே, சாதத்துடன் ஏதாவது பொரியல் செய்தால் விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான வாழைக்காய் பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம். 

தேவையானவை 

  • வாழைக்காய் - 2 
  • தேங்காய் - ஒரு கப் 
  • மிளகாய்தூள் - 2 மேசைக்கரண்டி 
  • மஞ்சள் தூள் - சிறிதளவு 
  • உப்பு - தேவையான அளவு 
  • புளி - பாதி 
  • கடுகு, உளுந்து, எண்ணெய் - தாளிக்க  

செய்முறை

முதலில் புளியை சிறிது தண்ணீர் விட்டு ஊற வைக்க வேண்டும். பின் மற்ற பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் தோல் சீவி, வாழைக்காயை சிறிது சிறிதாக நறுக்கி வைக்க வேண்டும். 

பின் நறுக்கிய வாழைக்காயுடன் ஊற வாய்த்த புளியை கரைத்து விட்டு, அதில் சிறிது மஞ்சள்,மிளகாய்தூள், உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். சில நிமிடங்களில் வாழைக்காய் வெந்துவிடும். 

வாழைக்காய் வெந்தவுடன், வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து போட்டு தாளிக்க வேண்டும். பின்னர் வேக வைத்த வாழைக்காயை அதில் போட்டு 2 நிமிடத்திற்கு குறைவாக குழையாமல் வதக்க வேண்டும். பின் தேங்காய் சேர்த்து இறக்க வேண்டும். இப்பொது சுவையான வாழைக்காய் பொரியல் தயார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!