Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 1 ஜூன், 2020

எமது உலகை செதுக்கிய ஏலியன்ஸ்! : Aliens Tamil 10

 Top 10 Outstanding Ancient Egyptian Paintings
போன பதிவில்… கூறிய படி சில முரன்பாடான தகவல்களையும்… எகிப்திய பிரமிட்டின்… ஆச்சரிய தொழில் நுட்பத்தையும் பார்ப்போம்.
இன்றுடன்… ஏலியன்ஸ் எதிர்கால நாங்கள் தான் என்ற கோனத்திலான பார்வையை தற்காலிகமாக விட்டு விட்டு… ஏலியன்ஸ் உண்மையிலேயே வேற்றுக்கிரகத்தினர்தான்… என்ற கோணத்திலான பார்வையை ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறேன்.

“சிரியஸ் பி” எனும் நட்சத்திரம்… நவீன விஞ்ஞானக்கருவிகளுனுதவியுடன்… கண்டு பிடிக்கப்பட்டது.
ஆனால்… தென்னாபிரிக்காவில் வாழும்.. டோஹான் என்ற பலங்குடி மக்கள் இதே சிரியஸ்ஸை அறிந்து வைத்துள்ளார்கள். அவர்களின்… பரம்பரை குறிப்புக்களிலும்… அவர்களுக்கென உள்ள பிரத்தியேக கலண்டரிலும்… இந்த சிரியஸ் பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாம்.
சாதாரணமாக… இந்த சிரியஸ் பி நட்சத்திரம்… வெற்றுக் கண்ணுக்கு புலப்படாது. அப்படியானால்… இவர்களின் பரம்பரை குறிப்புக்களில்… எவ்வாறு அந்த நட்சத்திரம் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது??? யார் சொல்லி இருப்பார்கள்??? ஏலியன்ஸா??? ( ஏற்கனவே… பண்டைய உலக வரை படத்தை உருவாக்கி கொடுத்தது நிச்சயம் ஏலியன்ஸ்தான்… என்ற கருத்து இருந்து வருகிறது. காரணம்… பூமியை விட்டு வெளியே சென்று பார்க்காமல்… கேள்வி ஞானத்தை மட்டும் வைத்து அவ்வாறான ஒரு வரை படத்தை வரைவதற்கு சந்தர்ப்பமே இல்லையாம்.)
இவற்றுக்கு இன்று வரை தெளிவான விடையில்லை…

அடுத்து… எகிப்திய பிரமிட கட்டப்பட்ட முறையும் மிகவும் வியப்பானதே….
அதுவும் முக்கியமாக… கீஸா பிரமிட்டில் பயண்படுத்தப்பட்டுள்ள கணித முறையும்… தொழில் நுட்பமும்… எவ்வாறு பயண்படுத்தினார்கள்… என்பதில் இன்றும் குழப்பங்கள் உள்ளன.
கீஸா பிரமிட்டில் 2.3 மில்லியன்ஸ் கற்கள் பயண்படுத்தப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றினதும் நிறை சுமார் 2.5 டன்கள்…
இவ்வளவு நிறையையும் நேர்த்தியாக பக்க நீளங்கள் 230 மீட்டராக உள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளது. சரிவு கூட 51 பாகையாக பேணப்பட்டுள்ளது. இன்றய தொழில் நுட்பத்திலேயே சற்று சிரமமான இந்த வேலையை… அவர்கள் அவ்வாறு தனியாக செய்தார்கள்???
மேலும்…
மஹா பிரமிட் என அழைக்கப்படும் பிரமிட்டில்…
நட்சத்திரங்கள்… கோல்கள்… உப கோல்ளின் அமைப்புக்கள்… போன்றவற்றின் நிலையான‌ அமைப்பு வரையப்பட்டுள்ளதாம்.
பூமியின் சுற்றளவு, விட்டம், பூமியின் திணிவு, புவியீர்ப்பினால் உண்டாகும் வேக வளர்ச்சி எல்லாம்… அந்த பிரமிட்களைக்கொண்டு அறியத்தக்கதாக உள்ளது.
இந்தளவு அறிவையும் அவர்களுக்கு கொடுத்தது யார்???
ஏலியன்ஸா??? அதற்கு நன்றி தெரிவிப்பதற்காகத்தான்… பிரமிட் சுவரோவியங்களில்… ஏலியன்ஸ் உதவுவது போன்று வரையப்பட்டுள்ளதா??? அப்படி ஏலியன்ஸ் உதவி இருந்தார்களானால்… ஏன் இப்போது எமக்கு தொழில் நுட்பம் கற்றுத்தரவில்லை??? ஏற்கனவே உதவியதால்… அவர்களுக்கே பாதிப்பு ஏற்பட்டதனாலா???
தெளிவான விடையற்ற கேள்விகள்…
எகிப்திய சாம்ராஜ்ஜத்தின் திடீர் வீழ்ச்சிக்கு… நைல் நதி வற்று மற்றும்… திடீர் பனியுகம் மட்டும்தான் காரணமா??? அல்லது அவற்றுக்கும்… ஏலியஸிக்கும் தொடர்பிருக்குமா??? சும்ம கேட்டன்… :)

ம்ம்ம்… இதை எழுதிட்டு இருக்கும் போது இன்னும் சில சம்பவங்களும் நினைவுக்கு வருகிறது… அவை ஏற்கனவே எழுதியதுதான்…. இதை கிளிக் பண்ணி… மதம் என்பதை விடுத்து… பண்டைய அறிவு என்கிற ரீதியிலும்… இந்த அறிவு எப்படி வந்தது என்கிற ரீதியிலும்… இந்த சந்தர்ப்பத்துடன்… தொடர்பு படுத்தி பார்க்கவும். :)

இத்துடன்… இன்னும் தகவல்களை சேகரிக்கும் வரை… ” நாங்கள் தான்… ஏலியன்ஸ்” என்ற கொள்கையை தற்காலிகமாக நிறுத்திவிட்டு…
ஏலியன்ஸ் உண்மையிலேயே… வேற்றுக்கிரக வாசிகளாக இருப்பதற்கான… சந்தர்ப்பங்களை பார்ப்போம்…
நமது… சூரியகுடும்பம்… மற்றும் நட்சத்திரங்கள் உள்ளடங்களான… நம்து கலக்ஸியை நாங்கள் படமாகப்பாக்கிறோம்…
அது எப்படி??? நாங்கள் ஒளியின் வேகத்தில் சென்றால் கூட… கல்க்ஸிக்கு வெளியே செல்ல பல நூறாண்டுகள் எடுக்குமே… அதுவும்… நாங்கள் இன்னமும் ஒளியின் வேகத்தை கிட்ட கூட நெருங்கவில்லை… அப்படி என்றால் எப்படி… இந்த படங்கள் எடுக்கப்பட்டன???…
இதற்கான விடை பலருக்கு தெரிந்திருக்கும்… அவர்களுக்கு நான் என்ன சொல்ல போறன் என்பதும் விளங்கி இருக்கலாம்…
குழப்பமாக உள்ளவர்களுக்கு அடுத்த பதிவில்… சுவாரஷ்யமான தகவல்களுடன் சந்திப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக