Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 1 ஜூன், 2020

நடுரோட்டில் பலத்த சத்தத்துடன் வெடித்த சிலிண்டர் லாரி.! பதற்றத்தில் காஷ்மீர் மக்கள்.!

காஷ்மீரில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து எரிந்தது.
காஷ்மீரிலிருந்து ஸ்ரீநகருக்குச் செல்லும் வழியில் ஒரு சிலிண்டர் லாரி நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்தபோது, ​​திடீரென தீப்பிடித்து முழு வாகனமும் எரிய தொங்கியது,பின்னர் போலீஸ் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பு, எல்பிஜி சிலிண்டர்கள் தீப்பிடித்து வெடிக்கத் தொடங்கின," என்று ஒரு அதிகாரி கூறியுள்ளார். அரை மணி நேரத்தில், டஜன் கணக்கான சிலிண்டர்கள் பலத்த சத்தத்துடன் வெடிக்க தொடங்கியது.
தீ விபத்து ஏற்பட்டபோது லாரி நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டதாகவும், சிலிண்டர்கள் அனைத்தும் வெடிக்கத் தொடங்கியதாகவும் காஷ்மீர் போலீஸ் சூப்பிரண்டு உதம்பூர் ராஜீவ் பாண்டே தெரிவித்தார்.வாகனம் மற்றும் சிலிண்டர்கள் தவிர எந்த உயிர் இழப்பும் இல்லாமல் முழுமையாக சேதமடைந்தன, நிலைமை முற்றிலும் கட்டுப்பாட்டில் உள்ளது எனவும் நெடுஞ்சாலையில் வாகன நடமாட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் மீட்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளார்கள்.கீழே அந்த வெடித்த சம்பவத்தின் வீடியோ உள்ளது பாருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக