ஹுவாமி அமேஸ்ஃபிட் பிப் S ஸ்மார்ட்வாட்ச்
ஹுவாமி நிறுவனத்தின் இந்த புதிய அமேஸ்ஃபிட் பிப் S ஸ்மார்ட்வாட்ச் முதல் முதலில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற CES 2020 இல் நிறுவனத்தின் சில ஸ்மார்ட் தயாரிப்புகளுடன் காட்சிப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய அமேஸ்ஃபிட் பிப் S ஸ்மார்ட்வாட்ச்சின் சுவாரஸ்யமான அம்சங்களைப் பற்றிக் கூறுகையில், இந்த சாதனம் 40 நாள் பேட்டரி ஆயுளுடன் அறிமுகமாகிறது.
அமேஸ்ஃபிட் பிப் S ஸ்மார்ட்வாட்ச் டிஸ்பிளே
புதிய அமேஸ்ஃபிட் பிப் S ஸ்மார்ட்வாட்ச் கலர் டிஸ்பிளே ஸ்கிரீன் உடன், தனிப்பட்ட செயல்பாடு கண்காணிப்பு அம்சம் மற்றும் பலவிதமான ஸ்போர்ட்ஸ் மோடு அம்சம் போன்று பல அம்சங்களைக் கொண்டுள்ளது. புதிய அமேஸ்ஃபிட் பிப் S ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தில் இன்பில்ட் ஜி.பி.எஸ் டிராக்கர் அம்சமும் உள்ளது. அமாஸ்ஃபிட் பிப் எஸ் ஸ்மார்ட்வாட்ச் ஜூன் 3 முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமாஸ்ஃபிட் பிப் S சிறப்பம்சங்கள்புதிய அமேஸ்ஃபிட் பிப் S ஸ்மார்ட்வாட்ச் நிறுவனத்தின் வலைத்தளத்தைத் தகவலின்படி, இந்த ஸ்மார்ட்வாட்ச் பாலிகார்பனேட்டில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த புதிய அமேஸ்ஃபிட் பிப் S ஸ்மார்ட்வாட்ச் ஸ்ட்ராப் இல்லாமல் வெறும் 19 கிராம் மட்டுமே எடையைக் கொண்டுள்ளது. அதேபோல், வாட்ச் ஸ்ட்ராப்புடன் சுமார் 31 கிராம் வரை எடையைக் கொண்டுள்ளது என்று ஹுவாமி தெரிவித்துள்ளது.
அமேஸ்ஃபிட் பிப் S ஸ்மார்ட்வாட்ச்சின் டிசைன்
புதிய அமேஸ்ஃபிட் பிப் S ஸ்மார்ட்வாட்ச்சின் டிசைன் பற்றிக் கூறுகையில் இதன் செவ்வக டயல் அளவு 42x35.3x11.4 மிமீ ஆகும். அமேஸ்ஃபிட் பிப் S இணைப்பிற்காக புளூடூத் V5.0 பயன்படுத்துகிறது. அதேபோல் இருப்பிட கண்காணிப்புக்கு க்ளோனாஸ் (GLONASS) அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. இது 1.28' இன்ச் கொண்ட டிரான்ஸ்ஃபெக்டிவ் கலர் TFT உடன் கூடிய ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளேயுடன், 2.5D கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் வருகிறது.
40 நாட்கள் நீடித்து நிலைக்கும் பேட்டரி
அமேஸ்ஃபிட் பிப் S ஸ்மார்ட்வாட்ச் 200 எம்ஏஎச் பேட்டரியுடன் 40 நாட்கள் நீடித்து நிலைக்கு ஆயுளுடன் வருகிறது. சுமார் 2.5 மணிநேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும் என்று ஹுவாமி கூறியுள்ளது. அமேஸ்ஃபிட் பிப் S ஸ்மார்ட்வாட்ச்சின் வழக்கமான பயன்பாட்டின் கீழ் இந்த ஸ்மார்ட்வாட்ச் 15 நாட்கள் ஆயுளுடன் செயல்படும் என்றும் ஹுவாமி கூறியுள்ளது. இன்னும் பல முதன்மையான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்வாட்ச் வரும் 3ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.
அமாஸ்ஃபிட் பிப் S விலை
Amazfit Bip S ஸ்மார்ட்வாட்ச் CES 2020 நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட பொழுது இதன் விலை சுமார் $ 69.90 டாலர்கள் என்று நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்த புதிய அமேஸ்ஃபிட் பிப் S ஸ்மார்ட்வாட்ச் இந்தியச் சந்தையில் சுமார் ரூ.5,200 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் கார்பன் பிளாக், ரெட் ஆரஞ்சு, வார்ம் பிங்க் மற்றும் வைட் ராக் உள்ளிட்ட நான்கு வெவ்வேறு நிறங்களில் கிடைக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக