Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 18 மே, 2020

இனி எல்லா இடங்களிலும் இ-காமர்ஸ் டெலிவரியை எதிர்பார்க்கலாம்!

இ-காமர்ஸ் டெலிவரி

பச்சை, ஆரஞ்சு, சிவப்பு ஆகிய மூன்று மண்டலங்களிலுமே பொருட்களை டெலிவரி செய்ய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.

கொரோனா கொள்ளை நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மூன்று கட்ட ஊரடங்கு நிறைவடைந்து தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. 
இந்த ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் பல தொழில்துறைகள், தொழில் ஆலைகள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன. உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளதால் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும் ஆயத்தமாகி வருகின்றன.

இதன் விளைவாக விநியோகத்திற்கும், தேவைக்கும் உத்வேகம் கொடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மே மாதம் இறுதி வரையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும் தொழில் செயல்பாடுகளுக்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. இன்று முதல் குருக்ராமிலுள்ள ஆலையில் வாகன உற்பத்தி தொடங்குவதாக மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், பானாசோனிக், ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ், ஸ்கூட்டர் இந்தியா, எல்ஜி போன்ற நிறுவனங்களும் விரைவில் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டுள்ளன. ஹீரோ மோட்டோகார்ப், ஹுண்டாய், லாவா மொபைல்ஸ், ஷியோமி போன்ற நிறுவனங்கள் ஏற்கெனவே சில நாட்களுக்கு முன் உற்பத்தியை தொடங்கிவிட்டன.

இந்நிலையில், ஃப்ளிப்கார்ட், அமேசான் போன்ற நிறுவனங்கள் சிவப்பு, ஆரஞ்சு, சிவப்பு ஆகிய மூன்று மண்டலங்களிலுமே பொருட்களை டெலிவரிசெய்ய ஆயத்தமாகி வருகின்றன. எனினும், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பகுதிகளில் பொருட்களை டெலிவரி செய்யமுடியாது. அத்தியாவசியப் பொருட்கள், அத்தியாவசியமல்லாத பொருட்கள் என அனைத்துமே டெலிவரி செய்ய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.

கடந்த இரண்டு வாரங்களாக பச்சை, ஆரஞ்சு மண்டலங்களில் மட்டும் ஸ்மார்ட்போன்கள், மின்னணு பொருட்கள் உள்ளிட்டவற்றை ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் டெலிவரி செய்து வருகின்றன. எனினும், பெரும்பாலான மக்கள் அத்தியாவசிய பொருட்களில் மட்டுமே பணத்தை செலவிட விரும்புவதால் அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான தேவை குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக