4ஆம்
குழந்தையும் பெண்னாக பிறந்தகால், கள்ளிப்பால் கொடுத்து சிசுக்கொலை செய்தாக
குழந்தையின் தந்தை மற்றும் பாட்டி வாக்குமூலம் அளித்தனர்.
மதுரை
மாவட்டம், சோழவந்தான் சேர்ந்த தம்பதி தவமணி, சித்ரா. இவர்களுக்கு ஏற்கனவே
மூன்று பெண் குழந்தைகள் பிறந்த நிலையில், சிறிது நாட்களுக்கு முன் நான்காவதாக
சித்ராவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில்,
அந்த பெண் சிசு, சிறிது நாளிலே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அந்த
சிசுவை வைகை ஆற்றில் புதைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் சந்தேகமடைந்த
சோழவந்தான் வி.ஏ.ஓ, காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.
புகாரின்
அடிப்படையில் சிசுவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு
அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி
வந்தனர். அப்பொழுது 4ஆம் குழந்தையும் பெண் குழந்தையாக பிறந்ததால், அதனை
கள்ளிப்பால் கொடுத்து கொன்றதாக குழந்தையின் தந்தை மற்றும் பாட்டி தெரிவித்தனர்.
இந்நிலையில் காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக