Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 18 மே, 2020

IRCTC புதிய விதி கட்டாயம்! இல்லைனா டிக்கெட் முன்பதிவுக்கு அனுமதியில்லை!



IRCTC புதிய விதி

இந்திய ரயில்வே இயக்கும் ராஜ்தானி வகை சிறப்பு ரயில்களுக்கும், சரியான நேரத்தில் இயக்கப்படக்கூடிய பிற ரயில்களுக்கும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் அனைத்து பயணிகளும், தாங்கள் போகும் மாநிலங்களின் "தனிமைப்படுத்தப்பட்ட நெறிமுறை" பற்றி விளக்கத்தை அறிந்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சில நிபந்தனைகளைக் கட்டாயமாக்கியுள்ளது.
IRCTC புதிய விதி
ராஜ்தானி வகை சிறப்பு ரயில்களுக்கும், சரியான நேரத்தில் இயக்கப்படக்கூடிய பிற ரயில்களுக்கும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் அனைத்து பயணிகளும், தாங்கள் போகும் மாநிலங்களின் "தனிமைப்படுத்தப்பட்ட நெறிமுறை" பற்றி அறிந்திருப்பதை முதலில் உறுதிப்படுத்த வேண்டும் என ரயில்வே தெரிவித்துள்ளது. இனிமேல், அத்தகைய பயணிகள் மட்டுமே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் முன்பதிவிற்கு புதிய கட்டாய விதி
இரயில் பயணம் மேற்கொள்ளும் அணைத்து பயணிகளும் தனிமைப்படுத்தப்பட்ட நெறிமுறை பற்றி கட்டாயம் அறிந்திருப்பதை முதலில் உறுதிப்படுத்த வேண்டும் நோக்கத்தில் இந்திய ரயில்வே இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்த நெறிமுறைகள் டிக்கெட் முன்பதிவிற்கு முன்னாள் பயணிகளின் அணுகலுக்குக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. நெறிமுறை பின்பற்றுதலுக்கு ஒப்புதல் வழங்கினால் மட்டுமே டிக்கெட் முன்பதிவிற்கு அனுமதிக்கப்படுவர்.
டிக்கெட் முன்பதிவு செய்ய இந்த நடைமுறை கட்டாயம்
இது குறித்து IRCTC அதிகாரிகள் கூறியதாவது, இப்போது, ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன், கணினி அல்லது ஸ்மார்ட்போன் திரையில் ஒரு பாப்-அப் தோன்றும், இதில் பயணிகள் அவர்கள் இலக்கு மாநிலத்தின் சுகாதார ஆலோசனையைப் படித்திருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்ய இந்த நடைமுறை தற்பொழுது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஒப்புதல் கொடுத்தால் மட்டுமே முன்பதிவிற்கு அனுமதி
பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன்பு அவர்களின் மாநிலத்தின் சுகாதார ஆலோசனையைப் படித்திவிட்டு ஒப்புதல் வழங்கவேண்டும் அல்லது சரி என்ற ஒப்புதல் ஆப்ஷனை கிளிக் செய்தால் மட்டுமே அடுத்த முன்பதிவு பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். பயணிகள் பின்பற்றவேண்டிய ஆலோசனை நெறிமுறை செய்தி இந்தி மற்றும் ஆங்கிலத்திலும் காண்பிக்கப்படுகிறது.
பயணிகள் உடன்படவில்லை என்றால் என்னவாகும்?
இந்த புதிய வித்து எப்படி இப்பொழுது கட்டாயமாக்கப்பட்டுள்ளதோ, அதேபோல், அரசாங்கத்தின் தொடர்பு-தடமறிதல் பயன்பாடான ஆரோக்யா சேது பயன்பாட்டையும் கட்டாயம் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று இந்த நெறிமுறைகளுடன் பயணிகளுக்கு அறிவுரை அறிவிப்பை அறிவிக்கிறது. இந்த புதிய விதிகளுக்குப் பயணிகள் உடன்படவில்லை எனில், அவர்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் ரயில்கள் இயக்கப்படுமா?
கொரோனா ஊரடங்கினாள் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள், யாத்ரீகர்கள், மாணவர்கள் மற்றும் மற்றவர்களுக்காக ஷ்ராமிக் ஸ்பெஷல் ரயில் இயக்கப்படுகிறது. அதேபோல், பயணிகளின் பயன்பாட்டிற்காக அனைவருக்கும் 15 ஜோடி சிறப்பு ராஜதானி ரயில்களை இந்திய ரயில்வே இயக்க முடிவு செய்துள்ளது. AC அல்லாத வகுப்புகளுடன் மேலும் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக