Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 18 மே, 2020

மீண்டும் ஏர்டெல் அதிரடி: தினசரி 2ஜிபி டேட்டா.! 365நாள் வேலிடிட்டி- என்ன திட்டம்?


வரம்பற்ற அழைப்புக
ஏர்டெல் நிறுவனம் ஜியோ, வோடபோன் போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக தொடர்ந்து சிறப்பான சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக ஜியோ நிறுவனம் கால் அழைப்புகளுக்கு கட்டணம் வசூல் செய்கிறது, ஆனால் ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து இலவச அழைப்புகளை வழங்கி வருகிறது.
இந்த ஏர்டெல் நிறுவனம் தினசரி 1.5ஜிபி டேட்டா,100எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்புகள், உள்ளிட்ட சலுகையை 365நாட்கள் வழங்கும்படி ரூ.2,398. ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளது. இந்நிலையில் 2ஜிபி தினசரி டேட்டா திட்டத்தை விரும்பும் பயனர்களுக்கு ஒரு அருமையான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது ஏர்டெல் நிறுவனம்.
விலை ரூ.2,498
அதன்படி ஏர்டெல் நிறுவனம் தற்சமயம் ஒரு புதிய வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது தினசரி 2.ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள், 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளுடன் 365நாட்கள் திட்டத்தை
அறிமுகம் செய்துள்ளது ஏர்டெல், இந்த திட்டத்தின் விலை ரூ.2,498 ஆகும். மேலும் இந்த திட்டத்தில்
ZEE5 பிரீமியம், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் மற்றும் விங்க் மியூசிக் ஆகியவற்றிற்கான இலவச அனுகலையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த புதிய திட்டத்தில் உங்கள் சாதனத்திற்கான இலவச வைரஸ் எதிர்ப்பு, இலவச ஹெலோட்டூன்ஸ் மற்றும் ஷா அகாடமியிலிருந்து 28 நாட்கள் மதிப்புள்ள இலவச வகுப்புகள் உள்ளிட்டவை பெறமுடியும். பின்பு ஃபாஸ்டேக் பரிவர்தனையில் ரூ.150 கேஷ்பேக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோ நிறுவனமும் தனது ரூ.2,399-திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா உள்ளிட்ட சலுகை 365நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. மேலும் இந்த ஜியோ திட்டத்தில் ஜியோ-டு-ஜியோவிற்கு வரம்பற்ற அழைப்பு, ஜியோ-டு-அல்லாத ஜியோ அழைப்புகளுக்கு 12,000 நிமிடங்கள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் கிடைக்கும்.
கடந்த மாதம் ஏர்டெல் ரூ.179, ரூ.279 மற்றும் ரூ.349 ஆகிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதேபோல் ரூ.179 மற்றும் ரூ.279 ஆகிய திட்டங்களில் ஆயுள் காப்பிட்டு திட்டம் கவர் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.349 ஆகிய திட்டத்தில் அமேசான் பிரைம்
பெம்பர்ஷிப் சந்தாவும் கிடைக்கிறது. பிஎஸ்என்எல் தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஈராஸ் நவ் சந்தா சப்ஸ்கிரைப்ஷனை வழங்கினாலும் அது அமேசான் பிரைம் அளவு பிரபலம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் சந்தா
ரூ.349-க்கு மட்டுமின்றி ரூ.299 திட்டத்திலும் அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் சந்தாவையும் வழங்குகிறது. அதோடு ரூ.349 திட்டத்தில் தினசரி
2 ஜிபி டேட்டா சலுகையும், அன்லிமிட்டெட் கால் வசதி, தினமும் 100 எஸ்எம்எஸ்-களையும் வழங்குகிறது. இந்த திட்டமானது 28 நாட்கள் செல்லுபடியாகும்.
28 நாட்கள் செல்லுபடியாகும்
ரூ.279 திட்டமானது 28 நாட்கள் செல்லுபடியாகும், இந்த திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா-வை வழங்குகிறது. அதேபோல் இதில் அன்லிமிட்டெட் குரல் அழைப்பு வசதி மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது. அதேபோல் இதில் ஏர்டெல் சார்பில் ரூ.2 லட்சம் ஆயுள் காப்பீடு சலுகைகளை வழங்குகிறது.
அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வசதி
குறிப்பாக ரூ.179 திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வசதியை வழங்குகிறது. இந்த திட்டமும் 28 நாட்கள் செல்லுபடியாகும் என்றாலும்
இதில் மொத்தமாக 2 ஜிபி டேட்டாவை மட்டுமே வழங்குகிறது. இதில் மொத்தம் 300 எஸ்எம்எஸ்களும் வழங்கப்படுகிறது.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக