அதாவது கொரோனாவால் இந்த இரு நாடுகளுக்கு இடையேயான போரானாது, கொரோனாவை விட மிக மோசமான அளவில் இந்த இரு நாடுகளையும் பாதிக்கும் அளவில் மீண்டும் வளர தொடங்கியுள்ளது.
அது சீனா அமெரிக்கா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளையும் பதம் பார்க்க தொடங்கிவிடும் என்ற கவலையும் மேலோங்கியுள்ளது.
அமெரிக்கா ஏற்கனவே சற்று முடிவுக்கு வந்த பிரச்சனையை தற்போது மீண்டும் கையில் எடுத்துள்ளது. அது என்னவெனில் நாம் அன்றாடம் பயன்படுத்தப்படும் கைப்பேசி தொலைக்காட்சி மற்றும் மடிக்கணினியில் பயன்படுத்தப்படும் சிப்புகள் தான். இதனை பயன்படுத்தி சீனா அமெரிக்காவின் தொழில் நுட்பங்களை களவாடுவதாகவும் மேலும் அமெரிக்காவினை உளவு பார்ப்பதாகவும் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
சீனாவினைச் சேர்ந்த முன்னணி தொலை தொடர்பு நிறுவனமான ஹூவாய், தொலை தொடர்பு சாதனங்கள் மூலம் சீனாவுக்காக உளவு பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார், ஆனால் ஹூவாய் நிறுவனமோ அப்படி எல்லாம் இல்லை என இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்து வருகிறது.
எனினும் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் கடந்த ஆண்டு ஹூவாய் நிறுவனத்தின் மீதான பொருட்களை அமெரிக்காவில் பயன்படுத்த கூடாது என தடைபோட்டது. அதுமட்டும் அல்ல அந்த நிறுவனத்தின் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளையும் விதித்தது. ஆக இப்படியாக இந்த இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து அவ்வப்போது பிரச்சனைகள் எழுந்து கொண்டே தான் உள்ளது. எனினும் ஆண்டின் பிற்பகுதியில் சற்று தளர்வுகள் அளிக்கப்பட்டது.
இப்படியாக பல விவகாரங்கள் அமெரிக்கா சீனாவுக்கு இடையே எழுந்து வந்த நிலையில் தான், ஒரு வழியாக சீனா அமெரிக்காவை சமாதானப்படுத்தியது. அமெரிக்கா சொல்வதற்கெல்லாம் தலையாட்ட தொடங்கியது. இதன் பிறகே சற்றே தளர்வு அளிக்கப்பட்ட நிலையில், முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தமும் போடப்பட்டது. ஆனால் மீண்டும் அதில் யார் கண் பட்டதோ தெரியவில்லை. மறுபடியும் பிரச்சனை கொரோனா எனும் ரூபத்தில் தொடங்கியுள்ளது.
ஆரம்பம் முதற்கொண்டே சீனாவினை சாடி வரும் டிரம்ப், ஒரு கட்டத்தில் சீனாவுடன் மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தை கிடையாது என்று பெரிய குண்டை தூக்கி போட்டார். அத்தோடு தான் சீனாவுடனான உறவை முறித்துக் கொள்ள விரும்புவதாகவும், சீனாவுடன் இனி எந்தவொரு உறவும் வேண்டாம் எனவும் கூறி வருகிறார். ஏனெனில் இன்று உலக நாடுகளில் கொரோனாவினால் அவதிப்படுவதற்கு காரணம் சீனா தான். சீனா நினைத்திருந்தால் அதனை ஆரம்ப கட்டத்திலேயே தடுத்திருக்கலாம். ஆக சீனா இதனை வேண்டுமென்றே தான் பரப்பியுள்ளது என்ற குற்றாச்சாட்டினையும் முன் வைத்து வருகிறார்
மேலும் சீனாவில் செய்திருந்த பல ஆயிரம் கோடி முதலீடுகளையும் திரும்ப பெற உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் தற்போது ஹூவாய் நிறுவனம் அமெரிக்காவின் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும், சிப் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யவதிலும் பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது அமெரிக்கா.
அமெரிக்காவின் இந்த புதிய கட்டுப்பாடுகளால் அமெரிக்காவில் செயல்படும் பல நிறுவனங்கள் சீனாவின் ஹூவாய், ஹாய்சிலிகான் நிறுவனங்களுக்கு செமிகண்டக்டர்கள் வழங்குவதைக் கட்டுப்படுத்தும். குறிப்பாக சீனாவின் ராணுவம் மற்றும் அறிவியல் பயன்பாட்டுக்கான சூப்பர் கம்ப்யூட்டர்களுக்கு தேவையான சிப்புகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இது உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதிலும் பல பிரச்சனைகளை எதிர்கொள்ளும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கையானது அமெரிக்காவை முதலிடத்திலும், அமெரிக்கா நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதத்திலும், அமெரிக்கா தேசிய பாதுகப்புக்கு முக்கிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் இருக்கும் என்றும் அமெரிக்க அரசின் மூத்த அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
சரி இதனால் சீன என்ன பிரச்சனையை எதிர்கொள்ள போகிறது? வாருங்கள் அதையும் பார்க்கலாம். இந்த புதிய விதிகளின்படி அமெரிக்க தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சீனாவின் ஹூவாய் நிறுவனம், உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் செமிகன்டக்டர்களை தன்னுடைய நாட்டுக்கோ வெளிநாடுகளுக்கோ ஏற்றுமதி செய்ய அமெரிக்க அதிகாரிகளிடம் இனிமேல் அனுமதி பெற்றே ஆக வேண்டும். ஆக ஹூவாய் நிறுவனம், தற்போது அதன் வி நியோக சங்கிலியில் பெரும் பிரச்சனைகளை எதிகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக