மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் விரும்பினால் சிவப்பு மண்டலத்திலும் சலூன் கடைகளை திறந்துகொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இன்று 3-ம் கட்ட இந்த ஊரடங்கு முடிய உள்ள நிலையில் தமிழகம் , மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மே 31-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது.
இதற்கிடையில், மத்திய அரசும் நாடு முழுவதும் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்துள்ளது. இதைத்தொடந்து மத்திய அரசு பச்சை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு ஆகிய மண்டலங்களுக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதனால், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் விரும்பினால் சிவப்பு மண்டலத்திலும் சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்களை திறந்து கொள்ளலாம் என கூறியுள்ளது.
இதைதொடர்ந்து, சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்களுக்கு விதிக்கப்பட்ட தடை மே 31-ம் தேதி வரை தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக