Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 27 மே, 2020

காக்கா கதை

ஓர் ஊரில் ஒரு பாட்டி ஒரு மரத்தடியில் வடை சுட்டு விற்றுக் கொண்டிருந்தார். ஒரு நாள், ஒரு காக்கா அந்த மரத்தில் வந்து அமர்ந்தது. வடையின் மணம் காக்காவின் மூக்கைத் துளைத்தது. எல்லோரும் வடையை வாங்கி சாப்பிட்டார்கள். காக்காவிற்க்கு வடை சாப்பிட மிகவும் ஆசை.

பாட்டியிடம் காக்கா உனக்கு உதவியாக வேலை செய்கிறேன். ஒரு வடை தருவாயா? என்று கேட்டது. பாட்டி உன்னால் எனக்கு என்ன வேலை செய்ய முடியும் என்று கேட்டார்.

அடுப்பு எரிக்கக் காய்ந்த சுள்ளி விறகு கொண்டுவந்துக் கொடுக்கிறேன் என்றது காக்கா. பாட்டி சரி என்றார். காக்கா பறந்து சென்று காட்டில் கிடந்த விறகுக் குச்சிகளை வாயில் கவ்வி எடுத்து வந்தது. இதுபோல பல முறை சென்று விறகுக் குச்சிகளைக் கொண்டு வந்து குவித்தது. பாட்டி மகிழ்ந்து போனார்.

காக்காவைப் பார்த்து ஒரு வடையை நீட்டினார் பாட்டி. காக்கா வடையை வாயில் கவ்விக் கொண்டு அதன் கூட்டிற்கு சென்றது.

அந்தப் பக்கமாய் ஒரு நரி வந்தது. காக்கா வாயில் இருக்கும் வடையை நரி பார்த்து அந்த வடையைப் பறித்துக்கொள்ள நினைத்தது. உடனே அது காக்காவைப் புகழத் தொடங்கியது.

காக்கா! ஆகா! எத்தனை அழகு நீ! உன் ஒருச்சாய்ந்த கண்ணும், கருகரு மேனியும்... அடடா! அழகே அழகு! உன் குரலும் இனிமையாகத்தான் இருக்கும். எங்கே, உன் இனிமையான குரலில் ஒரு பாட்டுப் பாடேன் என்று இதமாய்க் கேட்டது.

புகழ்ச்சிக்கு மயங்கிய காக்காவும், வாயில் இருந்த வடையை மறந்து, கா, கா... எனப் பாடியதும் வடை கீழே விழுந்தது. நரி வடையைக் கவ்விக்கொண்டு ஓடிச் சென்றது. நரியிடம் காக்கா ஏமாந்து போனது.

நீதி :

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றிக்கொண்டுதான் இருப்பார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக