ஒரு ஊரில் ஒரு வாத்தியார் இருந்தார். அவர் மதியம் சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் தூங்குவது வழக்கம். மாணவர்களைப் பாடம் படிக்கச் சொல்லி விட்டு அவர் வகுப்பறையிலேயே சற்று நேரம் தூங்குவார். மாணவர்கள் ஏன் வகுப்பில் தூங்குகிறீர்கள் என்று கேட்பார்கள். அதற்கு அவர் திறமையாகப் பேசுவதாக நினைத்து, தான் தினமும் கனவுலகிற்குச் சென்று பல பண்டைய காலத்து ஞானிகளை சந்தித்து வருவேன் எனக் கூறுவார்.
மாணவர்கள் அவர் சொல்வது பொய் என்று தெர்pந்துகொண்டு வாத்தியாருக்கு பாடம் கற்றுத்தர ஒரு திட்டம் போட்டார்கள். வாத்தியார் எதிர்பாராத ஒரு நாளன்று அவர் வகுப்புக்குள் நுழையும் நேரம் அனைத்து மாணவர்களும் தூங்குவது போல நடித்தார்கள். மாணவர்களைப் பார்த்த வாத்தியார் அனைவரையும் எழுப்பி ஏன் வகுப்பில் தூங்கினீர்கள் என்று கேட்டுத் திட்டினார். மாணவர்கள் அனைவரும் உங்களைப் போல நாங்களும் கனவுலகில் ஞானிகளைப் பார்க்கச் சென்று வந்ததாகக் கூறினார்கள். வாத்தியார் முகத்தில் ஈயாடவில்லை. அதன்பின் தனது தவறினை உணர்ந்து மாணவர்களுக்கு பாடம் கற்பித்தார் வாத்தியார்.
நீதி :
செய்கிற வேலையை சரியாக செய்தல் வேண்டும்.
குட்டிக்கதைகளும் - கட்டுரைத்தொடர்களும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக