Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 15 மே, 2020

தமிழக அண்டை மாநிலங்களுக்கு செல்ல விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் தொடர்பு எண்கள் அறிவிப்பு....

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த  மார்ச் மாதம் 24ஆம் தேதி தொடங்கி வரும் 17-ம் தேதி வரை 3 கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் மே 17-ம் தேதிக்கு பின் 4-ம் கட்ட ஊரடங்கு புதிய வடிவில் இருக்கும் என்று பாரத பிரதமர் அறிவித்துள்ளார்.

இந்த ஊரடங்கால் கடந்த 50 நாட்களுக்கு மேலாக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலம் மற்றும் வேலைகளுக்கு செல்ல முடியாமல் ஆங்காங்கு சிக்கி தவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது  ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டு வருகிறது.

அந்தவகையில் தமிழகத்தில் வசிக்கும் நபர்கள் தொழில் சார்ந்த பயணம் மேற்கொள்ள தமிழக அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு  செல்ல 94450-14424 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பேசினால் செல்ல வேண்டிய மாநிலத்துக்கு ஏற்ப திட்டமிட்டு பேருந்து செல்லும் நேரம் அவர்களுக்கு மட்டும் அறிவிக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும்,  ஏற்கெனவே வெளி மாநிலம் செல்ல மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக