கொரோனா
தாக்கம் பல வர்த்தகத்தை முடக்கினாலும், இந்த இக்கட்டான காலத்தில் பல நிறுவனங்கள்
புதிய வர்த்தகத்தையும், சேவைகளையும் உருவாக்கியுள்ளது. அந்த வகையில் இந்தியாவின்
முன்னணி பெயின்ட் நிறுவனங்கள் தற்போது சேனிடைசர் தயாரிப்பில் இறங்கியுள்ளது.
கொரோனா
பாதிப்புகள் இந்தியாவில் துவங்கிய போது தான், சேனிடைசரின் தேவை மக்கள் மத்தியில்
அதிகரித்தது. ஒரு கட்டத்தில் 50மி சேனிடைசர் பாட்டில் 150 முதல் 200 ரூபாய்
வரையில் விற்பனை செய்யப்பட்டதை நாம் கண் முன்னே பார்த்தோம்.
இதை
வர்த்தகமாக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது, இந்த வகையில் தான் நாட்டின் முன்னணி
பெயின்ட் நிறுவனங்கள் தற்போது சேனிடைசர் மற்றும் ஆண்டி பேக்ட்ரியல் பொருட்களைத்
தயாரிப்பில் இறங்கியுள்ளது.
பெர்ஜர்
பெயின்ட்ஸ்
கொரோனா
பாதிப்பிற்குப் பின் ஆன்டி பேக்ட்ரியல் பெயின்ட், மக்களை நெருங்காத வகையில்
பெயின்டிங் சேவைகள், குறிப்பாகக் கிராமம் மற்றும் சிறு நகரங்களைக் குறிவைத்து
பல்வேறு திட்டங்களை உருவாக்க முடிவு செய்துள்ளோம். இதோடு சேனிடைசர் தயாரித்து
வர்த்தகம் செய்யவும் திட்டமிட்டுள்ளோம் எனப் பெர்ஜர் பெயின்ட்ஸ் இந்தியா
நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் மற்றும் சிஇஓ அபிஜித் ராய்த் தெரிவித்துள்ளார்.
ஏசியன்
பெயின்ட்ஸ்
இந்திய
பெயின்ட் விற்பனை சந்தையில் மிகப்பெரிய வர்த்தகத்தைக் கொண்டுள்ள ஏசியன் பெயின்ட்ஸ்
புதிதாகச் சேனிடைசர்-ஐ 'Viroprotek' பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
நீண்ட
நாட்களாக ஆரோக்கியம் மற்றும் சுகாதாரப் பிரிவில் பல்வேறு முயற்சிகளைச் செய்து
வந்தோம், தற்போது மக்கள் தங்களைச் சிறப்பாகப் பாதுகாத்துக்கொள்ள எவ்விதமான
தொற்றுகளும் அண்டாமல் இருக்க 'Viroprotek'பிராண்ட் பெயரில் சேனிடைசர்-ஐ அறிமுகம்
செய்துள்ளோம் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக