சீனாவில் கொரோனாவினால் ஏற்பட்ட
தாக்கத்தினை விட, தற்போது சீனா பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. பொதுவாக கொரோனா
பாதிப்பு குறைந்து, முடங்கிக் போன தொழில் துறைகள் தற்போது தான் அங்கு துளிர் விடத்
தொடங்கியுள்ளன.
ஆனால் கொரோனாவிற்கு மாறாக தற்போது
அங்கு பல நிறுவனங்கள் சீனாவிலிருந்து வெளியேறி வருகின்றன.
மேலும் தொடர்ந்து அமெரிக்கா
கொரோனாவினை பரப்பியதற்கு காரணம் சீனா தான் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த
நிலையில் ஏற்கனவே ஆயிரக்கணக்காக அமெரிக்கா நிறுவனங்கள் சீனாவிலிருந்து வெளியேற
விரும்புவதாக தெரிவித்து வருகின்றன
இந்தியாவில் ஆலையை தொடங்க ஆர்வம்
இந்த நிலையில், ஜெர்மனியை சேர்ந்த
பிரபல காலணி நிறுவனம் சீனாவிலிருந்து வெளியேறி இந்தியாவில் தனது உற்பத்தியினை
தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. முன்னதாக இவ்வாறு பல பல அமெரிக்க
நிறுவனங்கள் இப்படி கூறுவதாக கூறப்பட்டாலும், அமெரிக்கா சீனாவின் மீது உள்ள
கோபத்தினால் தான் இப்படி கூறப்படுகிறது என்ற எண்ணமும் நிலவியது. ஆனால் உண்மையில்
நிறுவனங்கள் சீனாவில் இருந்து வெளியேற விரும்புவதை நிரூபிக்கும் விதமாக இந்த
செய்திகள் உள்ளன.
ஜெர்மனி நிறுவனம்
ஜெர்மனியின் பிரபல காலணி நிறுவனமான
வான் வெல்க்ஸின் (Von Wellx) நிறுவனத்தின் உரிமையாளரான காசா எவர், அதன் முழு
உற்பத்தியையும் இந்தியாவுக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆக இது
வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு கொண்டு வருவதனை பற்றிய அரசின் முயற்சிக்கான
பலனை அளிக்க தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இணைந்து உற்பத்தி
மேலும் இந்த ஜெர்மன் நிறுவனம்
உத்திரபிரதேசத்தில் உள்ள ஐட்ரிக் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன்
இணைந்து ஆக்ராவில் உற்பத்தியில் ஈடுபடும் என்றும் கூறப்படுகிறது. வான் வெல்க்ஸ்
நிறுவனம் பாத வலி, மற்றும் முதுகு வலி உள்ளிட்டவற்றுக்கு ஆறுதல் கொடுக்கும்
வகையில் காலணிகளை தயாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
ஆரோக்கியமான காலணிகள்
அதுமட்டும் அல்ல மேலும் மூட்டு வலிகள்
குறைக்கும் விதமாகவும், தசைகளை பாதுகாத்தல் போன்ற சரியான தோரணையில் செயல்பட்டு
வருவதாகவும், ஆரோக்கியமான காலாணிகளின் முன்னோடி எனவும் கூறப்படுகிறது. இதனாலேயே
இந்த காலாணிகள் உலகில் பல நாடுகளில் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
பல நாடுகளில் விற்பனை
குறிப்பாக சொல்லவேண்டுமானால் இந்த
பிராண்டு உலகில் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுவதாக
கூறப்படுகிறது. மேலும் உலகம் முழுக்க 100 மில்லியனுக்கும் அதிகமான
வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இது கடந்த 2019ம் ஆண்டு
இந்தியாவில் தொடங்கப்பட்டது. 500க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை இடங்களிலும் ஆன்லைனிலும்
இந்த காலணிகள் கிடைக்கின்றனவாம்.
வேலை வாய்ப்பு அதிகரிக்கும்
ஆக இந்தியாவில் வான் வெல்க்ஸின்
நிறுவனம் முதலீடு செய்வதை தான் சந்தோஷமாக கருதுவதாகவும், இதனால் பல ஆயிரம்
பேருக்கு வேலை கிடைக்கும் என்றும், உத்திரபிரதேசத்தில் எம்எஸ்எம்இ-யில் மாநில
அமைச்சர் உதய் பஹான் சிங் கூறியுள்ளார்.
இந்திய நிறுவனங்கள் எதிர்பார்ப்பு
இது 10,000 மேற்பட்ட நேரடி மற்றும்
மறைமுக வேலைகளை உருவாக்க இந்த ஒத்துழைப்பு உதவும் என்று ஐட்ரிக் இண்டஸ்ட்ரீஸின்
இயக்குனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஆஷிஷ் ஜெயின் கூறியுள்ளார். அன்னிய
நிறுவனங்கள் இந்தியாவுக்கு வருவது நல்ல விஷயம் தான் என்றாலும், அதே வேளையில்
இந்தியாவிலுள்ள சிறு குறு நிறுவனங்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்பதே இங்கு
அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக