Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 11 மே, 2020

முனிவர் காட்டிய வழி


முன்னொரு காலத்தில் அந்தபுரத்தை ஆண்டு வந்த அரசனுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு விக்ரம் எனப் பெயரிட்டு வளர்த்து வந்தான்.

விக்ரம் சிறு வயதிலிருந்தே யாரையும் மதிக்காமல் ஆணவத்துடன் வளர்ந்து வந்தான். அவனுக்கு எட்டு வயது ஆனதும் கல்வி மற்றும் அனைத்து கலைகளையும் கற்பதற்கு குரு குலத்திற்கு அனுப்பி வைத்தார் மன்னர்.

அங்கும் அவன் யார் பேச்சையும் கேட்காமல் குருவையும் மதிக்காமல் இருந்தான். அந்த குருவிடம் மிருகங்களை வசியம் செய்து, அவர் நினைத்தபடி ஆட்டுவிக்கும் சக்தி இருந்தது. அதை உபயோகித்து அவனுக்கு புத்தி புகட்டுவதற்கு ஒரு வழி கண்டுபிடித்தார்.

ஒரு நாள் அனைவரும் ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த போது இளவரசன் மட்டும் கரையில் அமர்ந்து ஆற்றுக்குள் கல் வீசி விளையாடிக் கொண்டிருந்தான். தூரத்தில் தண்ணீர் அருந்திக் கொண்டிருந்த சிறுத்தையை, தன் வசிய சக்தியால்

சிறுத்தை இளவரசனை துரத்த ஆரம்பித்ததும், அய்யோ! என்று அலறியபடி அடர்ந்த காட்டிற்குள் ஓடினான்.

இளவரசன் வெகு தூரம் ஓடிக் களைத்து, ஒரு பெரிய மரத்தில் ஏறிக்கொண்டான். துரத்தி வந்த சிறுத்தை அவனைக் காணாமல் சென்றுவிட்டது. பசி வயிற்றைக் கிள்ள, களைப்பில் தூங்கி போனான். தூங்கி எழுந்ததும் சூரியன் உச்சியிலிருந்தான். பசி, களைப்பு, பயம், கவலை இவற்றால் கால், கை நடுக்கமுற என்ன செய்வதென்று தெரியவில்லை.

சிறு வயதிலிருந்தே யாரையும் மதிக்காமல் தவறாக நடந்துகொண்டதை நினைத்து மிகவும் வருந்தினான். தன்னுடன் பயிலும் அனைத்து மாணவர்களும் குருவிடம் எவ்வளவு பயபக்தியுடன் நடந்து கொள்கிறார்கள். நான் மட்டும் ஏன் இப்படி இருக்கிறேன். அதனால் தான் இத்துன்பம் நேர்ந்தது என்று நினைத்து வருந்தினான்.

உடனே குருவை மனதில் நினைத்து குருகுலத்தை சென்று அடைய வழி காட்டும்படி மானசீகமாக குருவிடம் வேண்டிக்கொண்டான். அடுத்த நொடி யானையின் பிளிறல் சப்தம் கேட்டது. யானையைப் பார்த்த இளவரசன் யானைகள் தண்ணீர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் திறன் பெற்றவை என்று கேள்விப்பட்டிருக்கிறான். யானை தண்ணீருக்காக செல்வதை அறிந்து, அதன் பின்னால் இளவரசன் நடக்க ஆரம்பித்தான்.

வெகு நேரத்திற்கு பின் யானை ஒரு ஆற்றங்கரையை அடைந்தது. அதன்பின், மகிழ்ச்சியடைந்த இளவரசன் தன் குருவிடம் சென்று அவர் காலடியில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொண்டான்.

நாடாள வேண்டிய மன்னன் தவறான வழியில் செல்வதை தடுக்க, இந்த நாடகம் நடத்த வேண்டியிருந்ததை நினைத்த குரு, அவனுக்கு கற்பிக்க வேண்டிய அனைத்து கலைகளையும் கற்றுக்கொடுத்து ஒரு நல்ல நாளில் மன்னரிடம் அனுப்பி வைத்தார்.

நீதி :

வயதில் மூத்தோரை மதித்து நடத்தல் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக