Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 11 மே, 2020

விபீஷணன் இராமரை காண செல்லுதல்!

கதையை சொல்லி முடித்த விபீஷணன் இராவணனை பார்த்து, அண்ணா! இக்கதையில் வரும் நரசிம்மர் தான் திருமால். ஆதலால் அவரை பகைத்து அழிவை தேடிக் கொள்ளாதே என்றான். ஆனால் இராவணன் விபீஷணன் கூறியதை எதையும் மனதில் கொள்ளவில்லை.

இதைக் கேட்டு இராவணன் மிகவும் கோபங்கொண்டான். இராவணன், விபீஷணா! இக்கதையில் வரும் பிரகலாதனும் நீயும் ஒன்று தான். அவன் தன் தந்தையை கொன்று செல்வத்தை அடைந்தான். அதேபோல் நீ என்னை கொன்று இச்செல்வத்தை அடையலாம் என நினைக்கிறாய். அதனால்தான் அந்த இராம இலட்சுமணர் மேல் உனக்கு பாசம் பொங்கி வருகிறது.

 இதற்கு மேல் நீ இராம இலட்சுமணரை புகழ்ந்து பேசினால் உன்னை கொன்று விடுவேன் என விபீஷணன் மீது சீறினான். அது மட்டுமில்லை எனக்கு இராமனிடம் சீதையை திரும்பி அனுப்பும் எண்ணமும் இல்லை. ஆதலால் நீ இங்கு இருந்து சென்று விடு.

நீ என் தம்பி என்பதால் உன்னை கொல்லாமல் விடுகிறேன். இனியும் நீ எனக்கு உபதேசம் சொல்வதை நிறுத்திக் கொள். என் கண்முன் நிற்காதே இங்கிருந்து சென்று விடு. இல்லையேல் உன்னை கொன்று விடுவேன் என்றான்.

விபீஷணன், இராவணா! நான் சொல்வதைக் கேள். நான் உனக்கு சொன்ன அறிவுரைகளை நீ உணரவில்லை. உனக்கு அழிவு காலம் வந்துக் கொண்டிருக்கிறது என்பதை மறந்து விடாதே. நான் ஏதேனும் தவறாக சொல்லியிருந்தால் என் தவறை மன்னித்துக் கொள் எனச் சொல்லிவிட்டு வான் வெளியில் பறந்தான். விபீஷணனுடன் அனலன், அனிலன், அரன், சம்பாதி ஆகிய நான்கு அமைச்சர்களும் உடன் சென்றனர். அண்ணன் இராவணன், நீ இங்கிருந்து போய்விடு. இல்லையேல் உன்னை கொன்று விடுவேன் என்று அச்சுறுத்தியதால் இலங்கையை விட்டுச் சென்று கொண்டிருந்தான். இனி என்ன செய்வதென்று தெரியாத விபீஷணன் இராமனிடம் தஞ்சமடைய புறப்பட்டனர்.

 
இப்படி விபீஷணன் சென்று கொண்டிருக்கும் போது மகேந்திர மலையில் வானரங்கள் அக்கரையில் தங்கியிருப்பதை பார்த்தான். பிறகு தன் அமைச்சர்களோடு இனி என்ன செய்யலாம் என ஆலோசித்தான். அவர்கள் அனைவரும் இராமரிடம் சென்று சரணடையலாம் என்றனர். பிறகு வீபிஷணனும் அவனுடைய அமைச்சர்களும் மகேந்திர மலையை அடைந்தனர். அங்கு இராமர் சீதையின் நினைவில் வாடிக் கொண்டிருந்தார்.

 சீதையை நான் எவ்வாறு காண்பேன். இப்பெருங்கடலை நாம் எவ்வாறு கடக்க போகிறோம் என நினைத்து புலம்பிக் கொண்டிருந்தார். இலட்சுமணர் இராமருக்கு ஆறுதல் கூறினார். விபீஷணன், இப்பொழுது இரவு நேரமாகி விட்டதால் நாம் இச்சோலையில் தங்கி விட்டு, விடிந்ததும் இராமரை காண செல்லலாம் என்றான்.

பொழுது விடிந்தது. இராம, இலட்சுமணன், சுக்ரீவன் மற்றும் அனுமன் முதலிய வானர வீரர்கள் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர். இராகவா! இராமா! எனக் கூறி கொண்டு இராமரை நோக்கி வந்து கொண்டிருந்தனர். வானர வீரர்கள், விபீஷணனையும் அவனுடன் வரும் அமைச்சர்களையும் பார்த்தவுடன், அரக்கர்கள் இங்கே வந்துவிட்டார்கள்.

இவர்களை கொல்லுங்கள் எனக் கூச்சலிட்டுக் கொண்டு அவர்களை நோக்கி ஓடினர். சில வானர வீரர்கள் இவன் இராவணனாகத் தான் இருக்கக்கூடும் என கூறினர். சில வானர வீரர்கள் இராவணனுக்கு பத்து தலைகளும், இருபது கைகளும் இருக்கும். ஆனால் இவனுக்கு இரண்டு கைகள் தானே உள்ளது எனக் கூறினர். சில வானர வீரர்கள், இவர்களை பிடியுங்கள். இராமரிடம் கொண்டு சொல்வோம் என்றனர். சிலர் எச்சரிக்கையாக இருங்கள் இவர்கள் வானில் பறந்து சென்று விடுவார்கள் என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக