>>
  • சாம்பிராணி அல்லது தூபம் தரும் பலன்கள் என்ன என்று தெரியுமா?
  • >>
  • குலதெய்வ சாபத்தை கண்டறிவது எப்படி? அதற்கு பரிகாரம் என்ன தெரியுமா ?
  • >>
  • இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 6 மே, 2020

    தினந்தோறும் இரவில் செவ்வாழைப்பழம் சாப்பிடுவதால் என்ன பயன்கள் தெரியுமா...?

    செவ்வாழையில் இரும்புச் சத்து சுண்ணாம்புச்சத்து மற்றும் உயிர்ச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. மேலும் குழந்தையில்லாமல் கவலைப்படும் தம்பதியர் தினமும் செவ்வாழை பழம் சாப்பிட்டு வந்தால் விரைவில் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

    மலச்சிக்கல் இருப்பவர்கள், மூல நோய் குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வந்தால் விரைவில் நோயில் இருந்து  விடுபடலாம்.மேலும் அஜீரண கோளாறால் அவதி படுபவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டால் சரி ஆகிவிடும்.
     
    உடல்  எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் ஒரு செவ்வாழையை காலையில் உட்கொண்டு வந்தால், பசி நீண்ட நேரம் எடுக்காமல் இருக்கும்.
     
    வயது முதிர்வால் ஏற்படும் கண்பார்வை குறை உள்ளவர்கள் 21 நாட்கள் தினமும் செவ்வாழை பழத்தை சாப்பிட்டு வந்தால் கண் நன்றாக தெரியும்.
     
    பல் வலி, பல்லசைவு போன்ற பல வகையான பல் வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். நெஞ்செரிச்சலால் கஷ்டப்படுபவர்கள் தினமும் செவ்வாழை  சாப்பிட்டு வந்தால் சரி ஆகிவிடும்.
     
    நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினந்தோறும் இரவு வேளைகளில் செவ்வாழைப்பழம் சாப்பிட வேண்டும். தொடர்ந்து 48 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு  வந்தால் நரம்புகள் பலம் பெறும். ஆண்மை குறைவு பிரச்சனைகள் நீங்கும்.
     
    செவ்வாழையில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது சிறுநீரக கற்கள் உருவாவது, இதய நோய் மற்றும் புற்றுநோய் ஏற்படுவதை தவிர்க்கிறது.
     
    செவ்வாழை பழத்தில் ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் தன்மை அதிகம் உள்ளது சுற்றுப்புற சூழ்நிலைகள் மற்றும் தட்ப வெப்ப  மாறுபாடுகளால் உற்பத்தியாகி மனிதர்களை தொற்றும் தொற்றுநோய் கிருமிகளை கொல்லும் அரிய சக்தி செவ்வாழை பழத்திற்கு உண்டு.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக