அனைவரும் மகேந்திர மலையை அடைந்தனர். அப்பொழுது இரவாகிவிட்டதால் அன்றைய பொழுதை மகேந்திர மலையில் கழித்தனர். இலங்கையில் அனுமன் சேதத்தை ஏற்படுத்தி சென்றுவிட்டான்.
இராவணன் ஏவலாட்களுக்கு இலங்கையை முன்பு விட பன்மடங்கு அழகாக்கும் படி ஆணையிட்டான். பிறகு அரக்கர்கள் பொன்னாலும், தங்கத்தாலும், நவமணிகளாலும் இலங்கையை முன்பை விட அழகாக்கினர்.
இராவணன் இவற்றை கண்டு அவர்களுக்கு பரிசுகளை அளித்தான். இராவணன் ஓர் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தான். அக்கூட்டம் அனுமனால் இலங்கைக்கு ஏற்பட்ட அழிவு பற்றிய ஆலோசனைக் கூட்டமாகும்.
அக்கூட்டத்திற்கு தனக்கு நெருக்கமானவர்களை தவிர வேறு யாரையும் அவன் அனுமதிக்கவில்லை. அக்கூட்டத்திற்கு பலத்த காவல் ஏற்பாடு செய்திருந்தான். இராவணன் தன் அனுமதியின்றி எவரும் உள்ளே வரக்கூடாது எனக் கட்டளையிட்டான்.
ஆலோசனை கூட்டத்தில் இராவணன், ஒரு குரங்கு என் வீரத்தையும், என் ஆற்றலையும், என் பெருமையையும் அழித்துவிட்டு சென்றுவிட்டது. இதைக் காட்டிலும் பெரிய அவமானம் வேறு என்ன வேண்டும்? இலங்கை நகரை எரித்துவிட்டு சென்றுள்ளது.
இலங்கை நகரம் பெரும் அழிவைக் கண்டுள்ளது. எனக்கும் பெரும் அவமானத்தை ஏற்படுத்திவிட்டு அக்குரங்கு சென்றுவிட்டது. இவ்வளவு ஏற்பட்ட பின் நான் மட்டும் சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறேன் என புலம்பினான்.
அனுமன்இலங்கைக்கு வைத்த தீ இன்னும் அணையக்கூட இல்லை. ஆனால் நாம் சுகமாகத் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். அந்த அனுமன் இலங்கைக்கு ஏற்படுத்திவிட்டு சென்ற அழிவினால், நம் படைகள், நம் உறவினர்கள் என அனைவரையும் இழந்துள்ளோம்.
இது என்னை மிகவும் காயப்படுத்திவிட்டது. ஆனால் அக்குரங்கை நாம் கொல்லாமல் விட்டுவிட்டோம் என்பது மிகவும் வருத்தத்தை தருகிறது எனக் கூறி மிகவும் வருந்தினான்.
இதனைக் கேட்ட படைத்தலைவன் எழுந்து, அரசே! நான் முன்பே சொல்லி இருந்தேன். சீதையை கவர்ந்து வருவது மட்டும் ஒரு வீரனுக்கு அழகல்ல. நான் சொன்னதை அப்பொழுது நீங்கள் கேட்கவில்லை.
கரனையும் நம் அரக்கர்களையும் கொன்று, சூர்ப்பனைகையின் மூக்கையும் அறுத்த அந்த இராம இலட்சுமணரை அன்றே கொன்றிருக்க வேண்டும். அப்பொழுது விட்டுட்டு இன்று வருந்துவது ஒரு பயனும் இல்லை.
நாம் பகைவரை எதிர்க்காமல் இங்கு இன்பத்தை அனுபவித்து கொண்டிருப்பதில் என்ன பயன்? இப்படி இருந்தால் குரங்கு மட்டுமல்ல சிறு கொசுவும் நம்மை எதிர்க்கும் என்றான்.
இவன் பேசிய பிறகு துன்முகன், மகாபார்சுவன், பிசாசன், சூரியசத்ரு, வேள்வியின் பகைஞன், தூமிராட்சன் முதலான அரக்க வீரர்களும் எழுந்து பேசினார்கள். அரசே! எலிகளை கண்டு புலிகள் பயம் கொள்ளுமா? எங்களுக்கு அனுமதி தாருங்கள். நாங்கள் அந்த மனிதர்களையும், குரங்குகளையும் கொன்று தின்று வருகிறோம் என்றனர்.
அப்பொழுது இராவணனின் தம்பி கும்பகர்ணன் எழுந்து, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் எனக் கூறி அவர்களை அமர வைத்தான்.
பிறகு கும்பகர்ணன் இராவணனிடம் சென்று, உன் தம்பியாகிய நான் உனக்கு நல்லதை மட்டும் தான் சொல்வேன். நீ உன்னை உலகம் போற்ற வேண்டும் என நினைக்கிறாய். அவமானம் நடந்து விட்டது எனக் கூறுகிறாய்.
உன் மீது ஆசை கொண்ட மனைவிமார்கள் பலர் இருக்கையில் இராம இலட்சுமணர் இல்லாத நேரத்தில் நீ சீதையை கவர்ந்து வந்துள்ளாய். இது நியாயமா? நீ என்று சீதையை கவர்ந்து வந்து இங்கு சிறை வைத்தாயோ அன்றே அரக்கர்களின் புகழ் அழிந்து விட்டது. தீய செயல்களை செய்துவிட்டு புகழ் கிடைக்கவில்லை என்று புலம்புவதில் ஒரு பயனும் இல்லை.
நம் அரக்க குலத்திற்கு அழிவைத் தேடித்தரும் செயலை நீ செய்துள்ளாய். இராமர் தன் ஒரு அம்பினால் கரன் முதலிய பதினாயிரம் அரக்கர்களை கொன்றுள்ளான்.
இராமாயணம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக