ஒரு நாள் அதிக மழை பெய்தது. ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை. அந்த ஏரியின் நீர் குளிர்ச்சியை தாங்க முடியாத ஒரு தவளை, மழை நின்றதும் கிணற்று நீர் வெது வெதுப்பாக இருக்குமே என்று நினைத்து கிணற்றிற்குள் குதித்தது.
அந்த கிணற்றில் பல காலமாக வாழ்ந்து வந்த ஒரு தவளை இந்தப் புதிய தவளையை கண்டு மகிழ்ந்து வரவேற்றது. பின் பொந்தில் வைத்திருந்த உணவு வகைகளைப் புதிய தவளைக்குத் தந்தது.
இரண்டு தவளைகளும் பேசிக்கொண்டிருந்தன. கிணற்றிலிருந்த மற்ற தவளைகளுக்குப் புதிய தவளை வந்தது பிடிக்கவில்லை. புதிய தவளையை துரத்திவிட முடிவு செய்தன.
இரண்டு தவளைகளும் பேசிக்கொண்டிருப்பதை அருகே சென்று வேடிக்கை பார்த்தன. அப்போது அக்கிணற்றுத் தவளை ஏரித் தவளையிடம், நண்பனே! நீ இத்தனை நாளும் எங்கே தங்கியிருந்தாய்? எனக் கேட்டது.
நான் ஏரியில் தங்கி இருந்தேன் அதில் மீன், ஆமை, முதலை ஆகியவை உண்டு. கிணற்றைவிட மிகப்பெரியது ஏரி என்றது, ஏரித் தவளை.
கிணற்றுத் தவளை நம்பவில்லை. நண்பா நீ பொய் சொல்லுகிறாய். இந்த கிணற்றைவிட பெரிய நீர் நிலை உலகத்தில் இருக்க முடியாது என்றது. ஏரித் தவளை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், கிணற்றுத் தவளைகள் நம்பவில்லை.
எல்லாத் தவளைகளும் ஏரித் தவளையைப் பார்த்து நீ பொய்யன் என்று கூறி ஏரித் தவளையைத் தாக்க முயன்றன. அப்போது, கிணற்றிலிருந்து நீர் எடுக்க ஒரு பெண் தோண்டியை இறக்கினாள். அதனுள் ஏரித் தவளை, தாவிக்குதித்து தோண்டித் தண்ணீருடன் மேலே சென்று ஏரியை நோக்கிச் சென்றது.
நீதி :

முட்டாள்களிடம் இருப்பதை விட தனியே செல்வதே சிறந்தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக