பீட்ரூட்டை வைத்து எப்படி சுவையான
சட்னி செய்வது என இன்று பார்க்கலாம்.
தேவையானவை
- பீட்ரூட்
- கடலை பருப்பு
- உளுத்தம் பருப்பு
- காய்ந்த மிளகாய்
- புளி
- தேங்காய் துருவல்
- பூண்டு
- சீரகம்
- தனியா
- கறிவேப்பில்லை
- உப்பு
செய்முறை
முதலில் பீட்ரூட்டை நன்றாக தோல்
உரித்து துருவி வைத்து கொள்ளவும். பின் ஒரு சட்டியில் கடலை பருப்பு, உளுத்தம்
பருப்பு, காய்ந்த மிளகாய், வெங்காயம், சீரகம் மற்றும் தனியா சேர்த்து எண்ணெயில்
வதக்கவும்.
அதனுடன் எடுத்து வைத்துள்ள பீட்ரூட்டை
போட்டு வதக்கவும். அதன் இடையில் புலி, பூண்டு மற்றும் உப்பு சேர்த்து கலவை
உருவாக்கவும். அடுப்பில் வதங்கும் பீட்ரூட்டுடன் தேங்காய் துருவலை சேர்க்கவும்.
அரைத்து வைத்துள்ள கலவையை
பீட்ரூட்டுடன் சேர்த்து வதக்கவும். சுவையான பீட்ரூட் சட்டினி தயார். சாதம் மற்றும்
ப்ரெட் உடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக