Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 15 மே, 2020

6-ம் வீட்டில் புதன் இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

 'பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது" என்று சொல்வார்கள். அதாவது, இந்த இடத்தில் 'பொன்" என்பது செல்வத்திற்கான அதிபதி குருவை குறிக்கும். ஜாதகத்தில் குருவின் பலத்தைவிட, புதனின் பலம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதையே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

கல்வி, கலை, வித்தைகளுக்கு அதிபதி புதன் கிரகம். எந்தவொரு விஷயத்தையும் கண்ணால் பார்த்தவுடன், அதை கையால் செய்வதற்கு புதனின் அனுக்கிரகம் வேண்டும்.

ஜோதிடத்தில் நான்காவது கோளாய் கருதப்படும் புதனுக்கு அநூரு, அருணன், அனுவழி, கணக்கன், சௌமன், சலமன், சிந்தை, சூரியன், சௌமியன், துவன், தேர்ப்பாகன், நற்கொள், நிபுணன், பச்சை, பண்டதன், பாகன், புந்தி, புலவன், மதிமகன், மாலவன், மால்மேதை போன்ற தமிழ் பெயர்களால் அழைக்கப்படுகிறார்.

லக்னத்தில் 6-ம் இடத்தில் புதன் அமர்ந்தால் அந்த ஜாதகக்காரர் மாமன் வழியில் மிகவும் பிரபலமாக இருப்பார்.

6ல் புதன் இருந்தால் என்ன பலன்?

👉 புத்திசாலியான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

👉 தனது விருப்பம்போல் செலவு செய்யக்கூடியவர்கள்.

👉 மாமனின் உதவி கிடைக்கும்.

👉 குறை காண்பதில் வல்லவர்கள்.

👉 புகழ்ச்சியை விரும்பக்கூடியவர்கள்.

👉 ஆடம்பர செலவு செய்யக்கூடியவர்கள்.

👉 ஆசைகள் அதிகம் உடையவர்கள்.

👉 கடனால் பிரச்சனைகள் ஏற்படும்.

👉 நரம்பு தொடர்பான பிரச்சனைகளை உடையவர்கள்.

👉 எதிர்ப்புகளை பேச்சிலேயே வெற்றிகொள்ளக்கூடியவர்கள்.

👉 பிரச்சனைகளை தானே தேடிக்கொள்ளக்கூடியவர்கள்.

👉 வயிறு தொடர்பான பிரச்சனைகளை உடையவர்கள்.

👉 எதையும் ஆராய்ந்து செயல்படாதவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக