Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 2 மே, 2020

முட்டாளை மணந்த இளவரசி

ஒரு நாட்டு அரசனுக்கு மிகுந்த அறிவுடைய ஒரு மகள் இருந்தாள். அவள் யார் பேசினாலும் தன் அறிவினாள் அவர்களை மடக்கிவிடுவாள்.

அரசன், இளவரசிக்கு திருமண செய்ய நினைத்தார். அப்போது இளவரசி தந்தையே! என்னை திருமணம் செய்பவர் யாராக இருந்தாலும் பேச்சாற்றலில் என்னை வெற்றி பெறுபவரைத் தான் மணப்பேன் என்றாள் அவள்.

அதனால், பல நாட்டு இளவரசர்களும் அறிஞர்களும் போட்டியில் கலந்து கொள்ள அரண்மனைக்கு வந்தனர். அனைவரையும் தோற்கடித்து வெளியே அனுப்பினாள் இளவரசி.

ஏராளமான கூட்டம் அரண்மனைக்கு வருவதை பார்த்த அரசன் போட்டியில் வென்றால் திருமணம், தோற்றால் நூறு கசையடி, என்று அனைவருக்கும் தெரிவிக்கச் சொன்னான். இதனால் இளவரசியுடன் போட்டியிட அதிகம் யாரும் வரவில்லை. வந்தவர்களும் தோற்று கசையடி வாங்கிக் கொண்டு சென்றனர்.

அந்த நாட்டில் பிச்சைக்கார இளைஞன் இளவரசியை மணப்பதற்காக நடக்கும் போட்டியைப் பற்றி அறிந்தான். முயற்சி செய்து பார்ப்போம் என்று தன் ஊரில் இருந்து தலைநகரத்திற்கு செல்ல ஆரம்பித்தான்.

நீண்ட தூரம் சென்றதும், வழியில் இறந்து போன கோழி ஒன்று இருந்ததைப் பார்த்து, இது எதற்காவது பயன்படும் என்று அவன் சாக்குப் பைக்குள் அந்தக் கோழியைப் போட்டான்.

இன்னும் சிறிது தூரம் சென்றதும் வழியில் கிடந்த சிறு தொட்டியையும், மாடு, ஆடுகளைக் கட்டும் தடியையும், குதிரையின் கால் குளம்பு மற்றும் பல வளைவுகளை உடைய ஆட்டின் கொம்பு ஒன்று இவை அனைத்தையும் எடுத்துகொண்டு அரண்மனைக்குச் சென்றான்.

காவலுக்கு இருந்த வீரர்கள் கந்தல் ஆடையுடன் இருப்பதைப் பார்த்து சிரித்தனர். இளவரசியுடன் போட்டியிட வந்துள்ளேன். என்னை உள்ளே விடுங்கள், என்றான் அவன். பிச்சைக்காரனாகிய உனக்கு என்ன தெரியும்? என்று கேட்டான் வீரன் ஒருவன். என் திறமையான பேச்சினால் இளவரசியை வெல்வேன், இளவரசியிடம் சொல் என்று உறுதியுடன் சொன்னான் அவன்.

வீரர்கள் இளவரசியிடம் பிச்சைக்கார இளைஞன் ஒருவன் போட்டிக்கு வந்திருப்பதாகச் சொன்னார்கள். அவனை இங்கு அனுப்பி வையுங்கள் என்றாள் அவள்.

பிச்சைக்காரன் உள்ளே நுழைந்து பனிக்கட்டியை விட குளிர்ந்த கைகளை உடைய இளவரசியாரே வணக்கம் என்றான் அவன். என் கைகள் சூடாக உள்ளது. இந்தச் சூட்டில் ஒரு கோழியை வறுபட்டு விடும். என்று வெடுக்கெனப் பதில் தந்தாள் அவள்.

அப்படியா? கோழி வறுபடுமா என்று பார்க்கிறேன், என்று சொல்லி செத்த கோழியை வெளியே எடுத்தான். அவன், நடந்ததைக் கண்டு திகைத்தாள், தன் திகைப்பை மறைத்து சூடுபட்டால் கோழியின் கொழுப்பு ஒழுகுமே என்றாள். தொட்டியை எடுத்து இதற்குள் ஒழுகுவதை பிடித்துக் கொள்ளலாம் என்றான்.

தொட்டி விரிசல் விட்டிருந்தால் ஒழுகுமே என்றாள். குதிரைக் குளம்பை எடுத்த அவன், விரிசலை அடைத்து விடலாம் என்றான். எப்படி எதிர்க் கேள்வி கேட்டாலும், பதில் வைத்திருக்கிறானே என்று நினைத்துக்கொண்டு, தொட்டியை விட குளம்பு பெரிதாக இருக்கிறது. எப்படித் தொட்டியை அடைக்க முடியும் என்று கேட்டாள்.

அவன் கொண்டுவந்த தடியை வெளியே எடுத்து குளம்பிற்குள் தொட்டியை இறுக்கமாகப் பொருத்த முடியும், என்றான் அவன். ஏறுமாறான கேள்விகளுக்குத் தக்க பதில் தருகிறானே என்று ஆச்சரியப்பட்டு, அவனை மடக்க நினைத்த அவள், இளைஞனே! நான் என்ன சொன்னாலும் அதை வேறொன்றாகத் திருப்பி விடுகிறாய். நாக்கு பல திருப்பங்கள் இருப்பது போல நீ நடந்து கொள்கிறாய், என்றாள் அவள்.

தன் பைக்குள் இருந்த ஆட்டுக்கொம்பை எடுத்துக் காட்டி, இதைவிட அதிக திருகுகள் உள்ளதைப் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டான்.

இளவரசிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நீண்ட நேரம் யோசித்தால். அதன்பின், இளவரசிக்கும் அவனுக்கும் திருமணம் நடத்தி வைத்தான் அரசன்.

நீதி :

அறியுடையோர் எவரையும் வெல்வார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக