தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த உப்பள தொழிலாளியின் 17 வயது மகள், மகளிர் சுய உதவி குழு கடன் வழங்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 8ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த இளம்பெண் திடீரென தீக்குளித்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அருகில் இருந்தவர்கள் இளம்பெண்ணை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
இது தொடர்பாக குளத்தூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சரவணன், வேல்சாமி, குகன் மற்றும் சில இளைஞர்கள் சேர்ந்து இளம்பெண்ணுக்கு.பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், மேலும் அவருடைய செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு அடிக்கடி தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று இளம்பெண் சொல்போனுக்கு தொடர்பு கொண்ட இளைஞர்கள், இளம் பெண்ணை வெளியே ஒரு பகுதிக்கு வரும்படி அழைத்துள்ளனர். அதற்கு அந்த இளம் பெண் மறுக்கவே, போனில் இளம்பெண் குடும்பத்தினை தீ வைத்து கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த அந்த இளம்பெண் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீ வைத்து தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக போலீசாரிடம் விசாரித்தபோது தற்கொலைக்கு முயன்ற இளம்பெண், அங்குள்ள சில இளைஞர்களிடம் செல்போனில் அடிக்கடி பேசும் பழக்கம் உடையவர் என்றும், அதை அவரது தாய் கண்டித்து திட்டியதால் தற்கொலைக்கு முயற்சி செய்தாரா? இல்லை இளைஞர்களால் பாலியல் தொந்தரவு இருந்ததா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக