கொரோனாவுக்கு
மருந்து கண்டுபிடித்ததாக கூறிய திருத்தணிகாசலத்தின் ஜாமீன் மனுவை சென்னை எழும்பூர்
நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உலகையே
அச்சுறுத்தும் கொரோனா வைரசுக்கு லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,
அதற்க்கு மருந்து கண்டுபிடித்ததாக சமூக வலைத்தளங்களில் விடீயோக்களை வெளியிட்டவர்,
திருத்தணிகாசலம். இந்நிலையில், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி
மருத்துவத்துறை இயக்குனர் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் அவரை காவல்
துறையினர் கைது செய்தனர்.
இவர்
ஜாமீன் மனுக்கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு கூறினார். இன்று அது
விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து காவல் துறை தரப்பு கூறுகையில், இவர் கொரோனா பதற்ற
நிலையை லாபமீட்டும் நோக்குடன் பயன்படுத்தினார். இவரது ஜாமீன் மனுவை நிராகரிக்க
வேண்டும் மேலும் இவர் பெற்றதாக கூறும் சித்த மருத்துவ கவுன்சிலின் சான்றிதழ்
போலியானது என தெரிவித்தனர்.
மேலும்
திருதணிகாசலம் தரப்பில் கூறுகையில், சித்த மருத்துவமனையில் பட்டம் பெற்றதாக தான்
கூறவில்லை எனவும் பாரம்பரிய முறையில் பயிற்சி பெற்றுள்ளதாகவும் ஆயுஷ் அமைச்சகம்
பரிந்துரைத்த மூலிகையைத் உள்ளதாகவும் கூறினார்.
இருதரப்பு
வாதத்தையும் கேட்ட நீதிபதி, திருத்தணிகாசலத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக
கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக