கொரோனா
வைரஸ் (கொவிட்-19) தொற்றால் முடங்கி போயுள்ள விமான போக்குவரத்து, எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள்
ஐரோப்பாவிற்குள் மீண்டும் புதுபிக்கப்படும் என சர்வதேச விமான போக்குவரத்து சங்கம்
(IATA) நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் தலைவர் அலெக்ஸாண்ட்ரே டி ஜூனியாக் கூறுகையில், “எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் ஐரோப்பாவிற்குள் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும். இதன்போது மிகவும் கடுமையான சுகாதாரக் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படும்.
இந்தச் சேவைகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலும், மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட நகரங்கள் நோக்கியும் மட்டுமே சேவையில் ஈடுபட உள்ளன.
கட்டாயமாக உடல் வெப்பநிலை அளவிடபட்டு, முகக்கவசங்கள் அணியபட்டே பயணிகள் விமானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது கட்டயாமாக்கப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று காரணமாக அனைத்து விமான சேவைகளும் மார்ச் மாதம் நடுப்பகுதியில் இரத்து செய்யப்பட்டன.
தற்போது வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வரும் நாடுகள் மிக விரைவில் மீண்டும் விமான சேவைகளை தொடங்கவுள்ளன. இதன்படி பிரான்ஸ் ஜூன் மாதம் முதல் விமான சேவைகளை தொடங்கவுள்ளன.
இதேபோல, எதிர்வரும் ஜூன் 4ஆம் தேதி முதல் இத்தாலி, சர்வதேச பயணங்களை அனுமதிக்கின்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக