Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 18 மே, 2020

காக்கா ஏன் கறுப்பாச்சு?

ரொம்ப காலத்துக்கு முன்னாடி காக்கா வெள்ளையா இருந்துச்சாம். அப்ப எல்லா காக்காவும் ரொம்ப தூரமா சூரியன் வரைக்கும் பறந்து போகுமாம்.

சூரியபூர் நாட்டோட ராஜாவுக்கு ரொம்ப வருஷம் கழிச்சு அழகான இளவரசி பிறந்தாங்கலாம். குழந்தையில இருந்து வீட்டை விட்டே வெளிய வராம பெரியவங்களாகி வெளிய விளையாட வந்தாங்கலாம். அவங்க பேரு அற்புதா.

அவங்க விளையாடறத பாத்த சூரியனுக்கு அவங்களை ரொம்ப பிடிச்சு போச்சாம். இளவரசிக்கும் சூரியனை பிடிச்சிடுச்சாம். இரண்டுபேரும் எப்பயும் பேசிட்டே இருபாங்கலாம், ரொம்ப நல்ல நண்பர்களா மாறிட்டாங்க. ஒரு நாள் சூரியன் இந்த இளவரசிக்கு பரிசு கொடுக்க நினைச்சுதாம்.

சூரியன் கிட்ட வரைக்கும் பறக்கிர காக்காவ கூப்பிட்டு பையில சந்தனம், வாசனை திரவியங்கள், முத்து மாலை எல்லாம் கொடுத்து இளவரசி கிட்ட கொடுக்க சொல்லுச்சாம்.

காக்கா அந்த பைய தூக்கிகிட்டு இளவரசி இருந்த அரண்மனைய நோக்கி பறந்து போகும் வழியில் திருமண ஊர்வலம் போயிட்டு இருந்தது. அதில் நிறைய பழங்கள், உணவுப்பொருட்கள் எடுத்துட்டு போனாங்க. காக்காவுக்கு கொஞ்ச உணவாச்சும் கிடைக்குமேன்னு ஆசப்பட்டு, பைய ஒரு மரத்தில மாட்டிட்டு திருமண ஊர்வலத்துக்கு போச்சாம்.

மரத்துக்கு கீழ இருந்த ஒருத்தன் பையப் பார்த்து மரத்துல ஏறி பைக்குள்ள சூரியன் கொடுத்து அனுப்பின எல்லா பொருளையும் பார்த்து சொக்கி போயிட்டானாம். உடனே எல்லாத்தையும் எடுத்துகிட்டு மரத்தில இருந்த குப்பை எல்லாம் பையில எடுத்து போட்டுட்டு கிளம்பிட்டான்.

காக்கா நல்லா சாப்பிட்டு வந்து, பைய எடுத்துகிட்டு இளவரசி கிட்ட சூரியன் கொடுத்த பைய கொடுத்துச்சாம். திறந்து பார்த்த இளவரசிக்கு அதிர்ச்சி. இந்த சூரியன் ஏன் இப்படி பண்ணிடுச்சு. என் மேல அன்பே இல்ல. எல்லாம் நடிப்புனு சொல்லிட்டு பைய தூக்கிப்போட்டுச்சாம்.

மறுநாள் காலை, சந்தோஷமா இளவரசிய பார்க்கலாம்ன்னு வந்த சூரியன் அந்த பை கீழ கிடந்ததப் பார்த்து ஏதோ தப்பு நடந்திருக்குதுன்னு புரிஞ்சிடுச்சாம். பயங்கர கோபம் வந்துடுச்சாம். காக்காவை கோவமா பாத்த உடனே வெள்ளையா இருந்த காக்கா கறுப்பா மாறிடுச்சாம். அதனால தான் சூரியன் கிட்டகூட பறக்க முடியாம போச்சாம். கிட்ட இருந்த சூரியனுக்கும் கோபம் வந்து பூமி மேல தூரமா போயிடுச்சாம்.

நீதி :

கொடுக்கும் வேலையை சரியாக செய்தல் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக