கடலை மாவை வைத்து பல சுவையான இனிப்பு மற்றும் கார உணவுகளை செய்யலாம். இன்று அந்த கடலை மாவை வைத்து எப்படி பஜ்ஜி செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்.
தேவையான பொருள்கள்
- கடலை மாவு
- மிளகாய் தூள்
- கேசரி பவுடர்
- வாழைக்காய்
- அரிசி மாவு
- பெருங்காயம்
- எண்ணெய்
- உப்பு
செய்முறை
முதலில் வாழைக்காயை சீவி வைத்து கொள்ளவும். அதன் பிறகு கடலை மாவில் அரிசி மாவு, மிளகாய் தூள், சீரகம், பெருங்காயம் மற்றும் கேசரி பவுடர் ஆகியவற்றை சேர்த்து தேவையான சேர்த்து கட்டி இல்லாமல் கலக்கி கொள்ளவும்.
பின்பு சீவி வைத்துள்ள வாழைக்காயை அதில் முக்கி, ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் போட்டு பொரித்து முறுவலாக வறட்டு எடுத்து சாப்பிட்டால் அட்டகாசமான வாழைக்காய் பஜ்ஜி தயார். காரம் விரும்பி சாப்பிடுபவர்கள் வாழைக்காய்க்கு பதிலாக மிளகாயை பெரிய சேர்த்து கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக