ஆரோக்கிய சேது ஆப் பல்வேறு வகையிலும் பிரதானமாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜியோ போன்களுக்கான சுகாதார அமைவு பயன்பாட்டின் ஆரோக்கிய சேது ஆப் வெளியிடப்பட்டுள்ளது. ஜியோ போன் தற்போது 5 மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். எனவே அவர்களுக்கான ஆரோக்கிய சேது ஆப் என்பது முக்கியமான ஒன்று. இப்போது அவர்களுக்கான செயலி உருவாக்கப்பட்டுள்ளது. ஆரோக்கிய சேது ஆப், அனைவரும் பயன்படுத்த வேண்டியதை வலியுறுத்தி சமீபத்திய சிறப்பு ரயிலில் பயணம் செய்வோர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மாநில மத்திய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை
கொரோனா தொற்று பரவாமல் இருக்க மாநில மத்திய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பிரதான பகுதியாக நாடு முழுவதும் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் டிஜிட்டல் தொழில்நுட்பமாக ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
ஆரோக்கிய சேது என்ற ஆப் அறிமுகம்
இதையடுத்து தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கொரோனா பரவாமல் தடுக்கும் விதமாக ஆரோக்கிய சேது என்ற ஆப்பை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. கொரோனாவை ஒழிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வரும் நிலையில் அதன் ஒரு கட்டமாக இந்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டது.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தேசிய தகவல் மையம் இந்த செயலியை வெளியிட்டது. ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, வங்க மொழி, ஒரியா, குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட 11 மொழிகளில் செயலி அறிமுகம் செய்யப்பட்டது.
அரசு அறிமுகப்படுத்திய ஆரோக்கிய சேது
அரசு அறிமுகப்படுத்திய ஆரோக்கிய சேது என்ற செயலி அரசு அறமுகப்படுத்திய ஆரோக்கிய சேது என்ற செயலியை ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதன்பின் தங்கள் இருப்பிடம்( ஜிபிஎஸ்) மற்றும் புளூடூத்தை ஆன் செய்து கொள்ள வேண்டும். அதன்பின் கொரோனா வைரஸில் பாதிக்கப்பட்டவர்கள் நமது அருகில் யாரேனும் உள்ளார்களா என்பதை காட்டும்.
அதிக ஆபத்து என எச்சரிக்கும்
இந்த செயலியின் பிரத்யேகம் என்னவென்றால் கொரோனா தொற்று உள்ளவர்களிடம் இருந்து 6 தூரத்தில் நாம் இருந்தோம் என்றால் அது அதிக ஆபத்து என எச்சரிக்கும், இதையடுத்து உரிய எண்ணுக்கோ அல்லது 1075 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவித்து உதவியை பெற வேண்டும்.
கொரோனா தொற்று இருப்பவர்களிடம் தொடர்பு உள்ளதா
அதேபோல் இந்த செயலியில் கொரோனா ஆப் தற்காப்பு முறை குறித்த விழிப்புணர்வு, மேலும் நமக்கு கொரோனா தொற்றோ அல்லது கொரோனா தொற்று உள்ளவர்களிடம் தொடர்பு இருந்தாலோ உடனடியாக அவர்களது தரவுகளை அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ளும். இந்த தகவல்கள் வெளிநபர்களுக்கு பகிரப்படாது என உறுதியாக தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக