ஃபெராரி நிறுவனம் கவுன்டர்வய்ல் என்கிற சிறப்புத் தொழில்நுட்பம் கொண்டு, அதிக திறன் பெற்ற சைக்கிள் ரக வாகனத்தை எஸ்.எஃப் 01 ( SF01 bicycle ) என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது
ஆடம்பரமான கார்கள் மற்றும் சூப்பர்கார்கள் தயாரிப்பில் முன்னோடி நிறுவனமாக திகழ்வது ஃபெராரி. இந்நிறுவனத்தின் ஒவ்வொரு தயாரிப்புக்கும் மிகப்பெரியளவில் மதிப்புண்டு. ஆற்றல், செயல்திறன், தொழில்நுட்ப கட்டமைப்பு, மேம்படுத்தப்பட்ட நவீன அம்சங்கள் என பல்வேறு தேவைகளையும் ஒருங்கே பூர்த்தி செய்யும் வகையிலான கார்களை தயாரிப்பது ஃபெராரியின் தனிச்சிறப்பு.
இந்நிலையில் உலகம் முழுவதும் மின்சார வாகன உற்பத்தியின் மீதான மோகம் அதிகரித்து வருகிறது. இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் மின்சார வாகன உற்பத்தியில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளன.
இந்நிலையில் உலகம் முழுவதும் மின்சார வாகன உற்பத்தியின் மீதான மோகம் அதிகரித்து வருகிறது. இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் மின்சார வாகன உற்பத்தியில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளன.
காற்று மாசு ஏற்படுவதை தடுக்கவும், சுற்றுப்புறச்சூழல் பாதிக்கப்படாமல் பாதுகாக்கவும் மின்சார வாகனங்கள் பயன்படுகின்றன. இதை கருத்தில் கொண்ட புதியதாக தொடங்கப்படும் நிறுவனங்கள் முதல், வாகன தயாரிப்பு ஜாம்பவான்களாக திகழும் நிறுவனங்கள் வரை அனைத்தும் மின்சார வாகன தயாரிப்பில் கவனம் செலுத்த வருகின்றன.
இத்தாலியைச் சேர்ந்த சூப்பர்கார் தயாரிப்பு நிறுவனமான ஃபெராரி இருசக்கர வாகன தயாரிப்பதில் ஈடுபடத் துவங்கியது. அதற்காக அந்நிறுவனம் பியான்சி (Bianchi) என்கிற நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. அதற்காக நடைபெற்று வந்த பேச்சு வார்த்தையில் இருநிறுவனங்கள் பசுமை ரக இருசக்கர வாகனங்களை தயாரிக்க முடிவு செய்தன.
இதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வந்த நிலையில், பசுமை ரக இ-பை சைக்கிள் எஸ்எஃப்01 என்ற வாகனத்தை இருநிறுவனங்களும் தற்போது விற்பனைக்கு கொண்டுவந்துள்ளன. மிகுந்த திறனை வெளிப்படுத்தகூடிய விதத்தில் இந்த இ-பை சைக்கிளை உருவாக்கியுள்ளது ஃபெராரி.

மிகவும் எடை குறைந்த இந்த பைக்கில் அல்ட்ரா கார்பன் ஃபிரேம்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால் எடை குறைந்து காணப்பட்டாலும், அதிர்வுகளை எளிமையாக இதனால் கட்டுப்படுத்த முடியும். கரடு முரடான வழியில் பயணித்தாலும் அதிக அதிர்வுகளை இந்த சைக்கிள் தாங்கும்.
மேலும், இந்த சைக்கிளின் உருவாக்க திறன் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ’கவுன்டர்வேய்ல்’ எனப்படும் சிறப்புத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சைக்கிள், ரப்பரை போன்று வளையும் தன்மை கொண்டது. மிகவும் அரிதாக கிடைக்கக்கூடிய பிசின்கள் இந்த சைக்கிளில் இடம்பெற்றுள்ளன.
இதனாலேயே மிகவும் குறைந்த எடையில் இந்த சைக்கில் தயாராகியுள்ளது. அதிர்வுகளை உள்வாங்கும் போது, அதற்கு ஏற்றவாறு வளைந்து கொடுக்கும் இந்த சைக்கிள், கரடு முரடான சாலையை கடந்த பின்பு, மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவிடும்.
மிகவும் நுட்பமான, அறிவியல் அறிவுடன், அரிதான பொருட்கள் கொண்டு ஃபெராரி இ-ஃபை சைக்கில்ள் தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால் இதனுடைய விலை மிகவும் அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விலையை கேட்டால் மயக்கம்வே வந்துவிடும் அளவுக்கு, இந்த சைக்கிளுக்கான விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது இரண்டு ப்ரீமியம் ரக செடான் கார்களை காட்டிலும், சூப்பர் பைக்குகளை காட்டிலும் இதற்கு விலையை நிர்ணயம் செய்துள்ளது ஃபெராரி. அதாவது இந்த இ-பை சைக்கிளுக்கு ரூ. 14 லட்சம் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. நம்மூரில் இந்த விலைக்கு பல எண்ணிக்கையில் ஹேட்ச்பேக் கார்களை வாங்கிவிடலாம்.
இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள ஃபெராரி, ஒட்டுமொத்தாக 780 கிராம் எடை கொண்ட இந்த சைக்கிள் இ-பைக்கை காட்டிலும் உறுதி கொண்டது. கார்பன் ரிம்கள் மற்றும் பைரெல்லி பி ஜீரோ கிளின்சர் டயர்கள் கொண்டு இது தயாரிக்கப்பட்டுள்ளது. எடையில் சமரசம் செய்யாத அளவுக்கு 17 விதமாக வேதிப் பொருட்களை வைத்து இந்த சைக்கிளுக்கான ஃபிரேம் உருவாக்கப்பட்டுள்ளது.
சைக்கிள் டயர்கள் அதிகமான உருளும் திறன் கொண்டவையாக உள்ளன. இதனால் ஈரமான சாலையில் உறுதியாக செல்ல முடியும். மேலும் பஞ்சர் ஏற்படாமல் இந்த டயர்கள் செயல்படும். அவ்வளவு எளிதில் தேய்ந்துவிடாதபடி இந்த டயர்கள் கூடுதல் சிறப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது என்று ஃபெராரி தெரிவித்துள்ளது.
இவ்வளவு சிறப்பு மிகுந்த இபை -சைக்கிளை குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்ய ஃபெராரி திட்டமிட்டுள்ளது. அதன்படி தற்போதைக்கு 12 யூனிட்டுகள் எண்ணிக்கையில் மட்டுமே இந்த சைக்கிள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஒருவேளை எதிர்காலத்தில் மக்களிடையே கிடைக்கும் வரவேற்பை வைத்து, இந்த சைக்கிளுக்கான உற்பத்தி எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக