பெங்களூரில் ஏற்பட்ட அமானுஷ்யமான நிகழ்வு, பெங்களூர் உள்ளூர்வாசிகள் நேற்று (புதன்கிழமை) மதியம் மர்மமான மிகப்பெரிய சத்தத்தைக் கேட்டதாக நெட்டிசன்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த மர்மமான வெடிப்பு சத்தம் ஏற்பட்ட பொழுது அப்பகுதியை உள்ள கட்டிடங்கள் மற்றும் ஜன்னல்கள் நடுங்கி அதிர்ந்ததாகத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. உண்மையில் இதற்கான காரணம் என்ன பூகம்பமா? என்று மக்கள் அடைந்துள்ளனர்.
பெங்களூரில் திடீரென்று ஏற்பட்ட அமானுஷ்ய சத்தம்
பெங்களூரில் திடீரென்று ஏற்பட்ட இந்த அமானுஷ்ய சத்தத்தினால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். ஊடகத்திற்குக் கிடைத்த தகவலின்படி பெங்களூரின் வைட்ஃபீல்ட் பகுதியில், மதியம் 1:45 மணியளவில் உரத்த சத்தம் கேட்டுள்ளது. பெரிய 'பூம்' சத்தத்துடன் இடி இரைச்சல் போலச் சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் இந்த சத்தம் கேட்ட பொழுது தங்கள் வீடுகள் நடுங்குவதையும், ஜன்னல்கள் ஐந்து விநாடிகள் வரை அலறுவதையும் உணர்ந்ததாகக் கூறியுள்ளனர்.
வீடுகள் மற்றும் ஜன்னல்கள் அதிர்ந்ததால் மக்கள் பீதி
பெருத்த சத்தத்துடன் வீடுகள் மற்றும் ஜன்னல்கள் அதிர்ந்ததால் அப்பகுதி மக்கள் இது ஒரு பூகம்பம் என்று நினைத்ததாக உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளனர். பெங்களூருவில் உள்ள குக் டவுன், விவேக் நகர், ராமமூர்த்தி நகர், ஓசூர் சாலை, எச்ஏஎல், ஓல்ட் மெட்ராஸ் சாலை, உல்சூர், குண்டனஹள்ளி, கம்மனஹள்ளி, சி.வி.ராமன் நகர், வைட்ஃபீல்ட் மற்றும் எச்.எஸ்.ஆர் லேஅவுட் வரை இந்த சத்தம் கேட்டதாக மக்கள் புகாரளித்துள்ளனர்.
அமானுஷ்ய ஒலியின் காரணம் என்ன?
சமூக ஊடகங்களில் ஏராளமான நெட்டிசன்ஸ்கள் பதிவுகள் மற்றும் புகார்களை சமர்ப்பித்துள்ளார், இதை கண்ட பெங்களூரு போலீஸ் கமிஷனர், இந்த விவகாரம் குறித்து விசாரித்து வருவதாகவும், இந்த அமானுஷ்ய ஒலியின் காரணத்தையும், உருவாக்கத்தின் காரணத்தையும் கண்டறிய உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதேபோல், நகரத்தில் எங்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெங்களூரில் பூகம்பம் என்பது வதந்தியா அல்லது உண்மையா?
பெங்களூரில் ஏற்பட்ட உரத்த ஒலி நிச்சயம் 'பூகம்பம்' அல்ல என்பது தற்பொழுது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இது ஒரு விமானமாக இருக்கக் கூடுமோ என்ற சந்தேகத்தில், விமானப்படை கட்டுப்பாட்டு அறையையும் விசாரித்து வருவதாகப் பெங்களூரு போலீஸ் கமிஷனர் தெரிவித்திருக்கிறார். கர்நாடக மாநில இயற்கை பேரிடர் மேலாண்மை மையத்தின் (கே.எஸ்.என்.டி.எம்.சி) விஞ்ஞானிகள் தங்கள் அமைப்புகளைச் சோதித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
கே.எஸ்.என்.டி.எம்.சி அளித்து தகவல்
இருப்பினும், கே.எஸ்.என்.டி.எம்.சி, உரத்த ஒலி பூகம்பத்துடன் தொடர்புடையது அல்ல என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ஒலியின் காரணத்தை அவர்கள் கண்டுபிடிக்க முயன்று வருவதாகவும் பெங்களூர் மிரர் தெரிவித்துள்ளது. கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையத்தில் விஞ்ஞான அதிகாரியாக இருக்கும் ஜகதீஷ் கூறுகையில், இந்த ஒலி எந்த நில அதிர்வு அசைவுகளாலும் ஏற்படவில்லை என்று கூறியிருக்கிறார்.
வான்வழி மூலம் ஏற்பட்ட சத்தமா?
நில அதிர்வு காரணத்தினால் இந்த சத்தம் மற்றும் அதிர்வுகள் ஏற்படவில்லை என்றால், வான்வழி இயக்கம் மட்டுமே ஒரே சாத்தியமாக இருக்கக் கூடும் என்று அவர் மேலும் கூறியிருக்கிறார். ஆனால், அதற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் இதே போன்ற சத்தமா?
பெங்களூரில் ஏற்பட்ட அமானுஷ்யமான சத்தத்தை போல் வேறு எங்கையும் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளதா என்று ஆராய்ந்தபோது, இதேபோன்ற சத்தம் ஆஸ்திரேலியாவின், கான்பெர்ரா வடக்கில் உள்ள பெல்கொன்னென் மற்றும் குங்காஹ்லின் ஆகிய இடங்களில் இன்று கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக