Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 29 மே, 2020

ஹூவாய் நிறுவனத்தின் தரமான ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.!

ஹூவாய் நிறுவனம் சீனாவில் புதிய ஹூவாய் என்ஜாய் Z 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் நீலம், பிங்க் போன்ற நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஹூவாய் என்ஜாய் Z 5ஜி ஸ்மார்ட்போனின் விலை 2199யுவான்( இந்திய மதிப்பில் ரூ.23,410) ஆக உள்ளது. இப்போது என்ஜாய் Z 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஹூவாய் என்ஜாய் Z 5ஜி ஸமார்ட்போனின் 6.57-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2400 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

ஹூவாய் என்ஜாய் Z 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

இந்த ஸ்மார்ட்போக் மாடல் மீடியாடெக் Dimensity 800 பிராசஸர் வசதியுடன் 7என்எம் சிப், கார்டெக்ஸ்-ஏ76 ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 உடன் EMIUI 10.1ஆதரவைக் கொண்டுள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஹூவாய் என்ஜாய் Z 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

இந்த ஹூவாய் என்ஜாய் Z 5ஜி ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, மேலும் 22.5வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹூவாய் என்ஜாய் Z 5ஜி ஸ்மார்ட்போனில் டூயல் சிம் ஆதரவு, 5 ஜி (எஸ்ஏ/ என்எஸ்ஏ) / இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.0, ஜிபிஎஸ்,

யூ.எஸ்.பி-வகை சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!