இந்த புதிய ரெட்மி மாணிட்டர் சாதனம் ஆனது 3-மைக்ரோ-எட்ஜ் வடிவமைப்பு மற்றும் 7.3எம்எம் அளவில் மெல்லிய வடிவமைப்பு உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக உள்ளன. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.
ரெட்மி 1ஏ மாணிட்டரில் புளூ லைட் வசதி மற்றும் கண்களை பாதுகாக்கும் திறன் என பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் புதிய ரெட்மி மாணிட்டரில் 178 டிகிரி வியூவிங் ஆங்கில், எனவே சிறந்த அனுபவத்தை தரும்.
குறிப்பாக இந்த சாதனம் 23.8-இன்ச் ஐபிஎஸ் ஸ்கிரீன் மற்றும் 1920x1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் இந்த மாணிட்டரின் பின்புறம் பவர் பட்டன், எச்டிஎம்ஐ போர்ட், விஜிஏ போர்ட் உள்ளிட்ட ஆதரவுகளும் இடம்பெற்றுள்ளது.
இந்த புதிய ரெட்மி சாதனம் ஸ்டான்டு டெக்ஸ்ச்சர் ஃபினிச் செய்யப்பட்டுள்ளது, தற்சமயம் இந்த மாணிட்டர் ஆனது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, விரைவில் அனைத்து சந்தைகளிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ரெட்மி மாணிட்டர் விலை 599யுவான் ஆக உள்ளது, இந்திய மதிப்பில் ரூ.6330. மேலும் இந்த ரெட்மி மாணிட்டருக்கு மூன்று ஆண்டுகள் வாரண்டியும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ரெட்மி சீனாவில் தனது புதிய ஸ்மார்ட் டிவியை ரெட்மி 10 எக்ஸ் ஸ்மார்ட்போன்களோடு அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 10 எக்ஸ் ஸ்மார்ட்போன் வெளியீட்டுத் தேதியின் போது ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் தொடர் அறிமுகப்படுத்த உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக