Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 29 மே, 2020

Jio அறிவித்துள்ள Double Data ஆபர்; அம்பானியின் அடுத்த அதிரடி!

ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட்டின் வருடாந்திர சந்தா திட்டங்களானது இனிமேல் "டபுள் டேட்டா" நன்மையை வழங்கும், அதாவது இரட்டிப்பு டேட்டா நன்மைகளை வழங்கும். இந்த புதிய நன்மைகள் ஏற்கனவே நிறுவனத்தின் இணையதளத்தில் பிரதிபலிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் ஜியோ அதன் ப்ரான்ஸ் திட்டத்திலிருந்து மிகவும் விலையுயர்ந்த டைட்டானியம் திட்டம் வரை என அதன் அனைத்து ஜியோ ஃபைபர் திட்டங்களிலும் புதிய டபுள் டேட்டா நன்மையை சேர்த்துள்ளது.

நிறுவனத்தின் வலைத்தளத்தின்படி, JioFiber ப்ரான்ஸ் மாதாந்திர திட்டமானது முன்னதாக 250GB அளவிலான டேட்டாவை வழங்கியது. தர்ப்பித்து அது 350 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். இதேபோல், ஜியோ ஃபைபர் சில்வர் மாதாந்திர திட்டம் இப்போது 800 ஜிபி வரையிலான வரம்பற்ற டேட்டாவை வழங்குகிறது.

இதைவிட அதிக டேட்டாவை நுகர்வோர்கள் இதற்கு அடுத்தப்படியாக உள்ள ஜியோ பைபர் திட்டங்களைத் தேர்வு செய்யலாம். கோல்ட் பிளான் இப்போது 250 எம்.பி.பி.எஸ் வேகத்தின்கீழ் மாதத்திற்கு 1,750 ஜிபி வரையிலான வரம்பற்ற டேட்டாவை வழங்குகிறது.

டயமண்ட் பிளான் இப்போது 500 எம்.பி.பி.எஸ் என்கிற வேகத்தின் கீழ் மாதத்திற்கு 4,000 ஜிபி அளவிலான வரம்பற்ற டேட்டாவை வழங்குகிறது. இறுதியாக, 1 ஜி.பி.பி.எஸ் வேகத்தின் கீழ் 7,500 ஜிபி அளவிலான டேட்டாவை மிக விலையுயர்ந்த பிளாட்டினம் திட்டம் உள்ளது.

டேட்டாவை தவிர்த்து, மேற்கூறப்பட்ட அனைத்து ஜியோ ஃபைபர் திட்டங்களும் சில இலவச நன்மைகளும் வழங்குகின்றன. இந்தியா முழுவதும் இலவச ஜியோ வாய்ஸ் அணுகல், ஆண்டுக்கு ரூ.1,200 மதிப்புள்ள டிவி வீடியோ காலிங் கான்பிரன்ஸ் சலுகைகள், வீட்டு நெட்வொர்க்கிங் உடன் ஸீரோ-டிலே கேமிங் அனுபவம் போன்றவைகளையும் பயனர்கள் பெறலாம்.

இதற்கிடையில், ரிலையன்ஸ் ஜியோ தனது மலிவான ரூ.98 ப்ரீபெய்ட் திட்டத்தை "அமைதியாக" சந்தையில் இருந்து நீக்கியது. இனிமேல் ரூ.129 திட்டம் தான் ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களின் தொகுப்பின் மிகவும் மலிவான திட்டமாக திகழ்கிறது.

நன்மைகளை பொறுத்தவரை, ரூ.129 ஆனது 2 ஜிபி அளவிலான டேட்டா, ஜியோ அல்லாத நெட்வொர்க்குடன் 1000 நிமிடங்கள் இலவச குரல் அழைப்புகள் போன்ற நன்மைகளை மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்குகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக