ஆனால் இந்த வராக விநாயக ஆலயம் முழுக்க முழுக்க சுட்ட செங்கற்களைக் கொண்டு மட்டுமே உருவான தாகும்
எத்தகைய உஷ்ண சக்தியையும் தாங்கும் அதீத சக்தி இதற்கு உண்டு. வேறு எந்த உலோகத்தாலும் அதீதமான உஷ்ணத்தை தாங்க முடியாது. ஆனால் மண் பாண்டங்களில் வைக்கப்படும் நீர் வருஷ கணக்கில் கூட கெட்டுப்போகாமல் அருந்தும் நிலையில் இருக்கும்.
மண்ணிற்கே இத்தகைய அற்புத சிறப்புகள் என்றால் மண்ணால் எழுந்த விநாயக ஆலயத்தின் சிறப்பை வர்ணிக்கவும் இயலுமா ?
மயில்ரங்கத்தில் எழுந்தருளி யிருக்கும் விநாயக மூர்த்தி நடப்பு கலியுலகில் இந்த மூர்த்தி ஸ்ரீவராக விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
அடிமுடி காணா அண்ணா மலை வைபவத்துடன் தொடர்புடைய தலமே மயில்ரங்கம் ஆகும்.
எம்பெருமானின் திருவடி களைக் காண்பதற்காக திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியைக் குடைந்து செல்ல முற்படுகிறார்.
அவ்வாறு பூமியைத் தோண்ட ஆரம்பித்த வராக மூர்த்தி எத்தனை முயற்சி செய்தாலும் கடுகளவு பூமியைக் கூட தன்னுடைய கூரிய பற்களால் பெயர்க்க முடியவில்லை.
சாதாரண பன்றிக்கே பூமியின் அடியில் முப்பது அடி ஆழத்தில் உள்ள கிழங்கு வகைகள், மூலிகைகள், கற்கள், மணல் பாங்கு, நீரோட்டம், உலோகங்கள் போன்ற வற்றைத் தெளிவாக அறியும் சூட்சும சக்தி உண்டு.
அப்படியானால் வராக அவதார மூர்த்தியின் சக்தி எத்தனை பிரம்மாண்ட மானதாக இருக்க வேண்டும். ஆனால் என்னதான் முயற்சி செய்தாலும் பூமியைப் பெயர்க்க முடியாமல் போனது மட்டுமல்லாமல் பூமிக்கு அடியில் என்ன இருக்கிறது என்ற சூட்சும விஷயமும் பெருமாளுக்கு தெரிய வில்லை.
அப்போது அசரீரி ஒலித்தது, “வராக மூர்த்தியே, எந்த காரியமாக இருந்தாலும் முழு முதற் கடவுள் மூலாதார கணபதியை வணங்கித்தானே ஆரம்பிக்க வேண்டும்,
அதைக் கேட்ட வராகப் பெருமாள் தன்னுடைய தவறை உணர்ந்து விநாயக மூர்த்தியைத் தொழுதார். அப்போது விஷ்ணு மூர்த்திக்கு காட்சி கொடுத்து அனுகிரகம் அளித்தவரே இந்த ஸ்ரீவராக விநாயக மூர்த்தி ஆவார்.
ஸ்ரீவராகவிநாயக மூர்த்தியின் திவ்ய தரிசனத்தால் தன்னுடைய பற்களில் அற்புத பலம்பெருகுவதை உணர்ந்த பெருமாள் வேகமாகப் பூமியைத் தோண்ட ஆரம்பித்தார்.
பூமியைத் தோண்ட தோண்ட பூமியின் அடித்தளத்திலிருந்து ஓர் அற்புத ஜோதி வெளிப்படுவதையும் உணர்ந்தார்.
அதுவே அண்ணாமலை பூரண ஜோதி என்பதை உணர்ந்து கொண்டார் விஷ்ணு மூர்த்தி.
திரு அண்ணாமலையாரின் அருட்பெருஞ்சோதி தனிப் பெருங் கருணையாகிய ஜோதி தரிசனத்தைப் பெற்ற விஷ்ணு மூர்த்தி, ஸ்ரீ.வராஹ விநாயக மூர்த்தியை முறையாக வழிபட்டு நன்றி செலுத்தினார். அன்று முதல் இந்த விநாயகப் பெருமான் ஸ்ரீவராக விநாயக மூர்த்தியாகப் புகழ் பெற்றார்.
இந்த வராஹ விநாயக மூர்த்திக்கென ஒரு சிறப்பான வழிபாட்டைப் பற்றி சித்தர்கள் எடுத்துரைக்கிறார்கள்.
அது தான் கர தள சுர கல வழிபாடு
என்ற நம் எண்ணங்கள் நிறைவேற ஒரு அற்புத வழிபாடு. இது மயில்ரங்கம் ஸ்ரீவராக விநாயக மூர்த்திக்கு உரியதாகும்.
கர தளம் என்றால் உள்ளங்கை தாமரை.*
சுர கலம் என்றால் மண் அகலில் ஊற்றிய பசு நெய்.
சுரர் என்றால் தேவர், கலம் என்றால் தேவர்கள் உறையும் கலமான பசுவிடமிருந்து பெறப்படும் நெய்.
எனவே கரதள சுரகல வழிபாடு என்பது மண் அகலில் பசு நெய்யை ஊற்றி அதை தாமரை போன்ற விரித்த உள்ளங்கையில் தாங்கியவாறே ஸ்ரீவராக விநாயகரை வலம் வந்து வணங்குவதாகும்.
நெய் ஊற்றிய அகல் விளக்கை கையில் தாங்கி விநாயகரை அடிப் பிரதட்சிணமாக வலம் வந்து வணங்கி பின்னர் அந்த தீபத்தை விநாயகருக்கு ஏற்றி வழிபட வேண்டும்.
ஏற்றிய தீபத்தை கையில் தாங்கி விநாயகரை பிரதட்சிணமாக வலம் வந்தும் வணங்கலாம்.
அவரவர் வயது, நம்பிக்கையைப் பொறுத்து எத்தனை பிரதட்சிணங்கள் வேண்டுமானாலும் நிறைவேற்றலாம். ஒவ்வொரு பிரதட்சிணத்திற்கும் ஒரு அகல் தீபத்தை ஏற்றிக் கொள்ளவும். இடது உள்ளங்கை மேல் ஒரு சிறு பருத்தி துணி அல்லது தாமரை இலை அல்லது பூவரசு இலையை வைத்து அதன் மேல் அகல் தாங்கிய வலது கையை வைத்து வலம் வரவும்.
பல திருத்தலங்களிலும் கையில் விளக்கை ஏந்திய பாவை விளக்கை பார்த்திருப்பீர்கள். இவை வெறும் உலோக உருவங்கள் கிடையாது. ஜீவ சக்தி உள்ள தேவதைகளே.
பகலில் நடை சார்த்தும்போதும், இரவில் நடை சார்த்திய பின்னரும் இந்த பாவை விளக்குகள் உயிர் பெற்று எழுந்து விடும். அப்போது அவர்கள் கையில் உள்ள விளக்குகளில் தாமாகமவே தேவ ஜோதி தோன்றும். இந்த பாவை தீபத்திற்கு எண்ணெயோ, திரியோ தேவையில்லை.
இந்த பாவை ஜோதியானது அந்தந்த திருத்தலங்களில் பக்தர்களால் ஏற்றப்பட்ட அனைத்து ஜோதிகளில் விளைந்த தோஷங்களையும் நிவர்த்தி செய்து அத்தலத்தில் தீபம் ஏற்றியவர்களுக்கு அவரவருக்குத் தகுதியான நல்வரங்களை அளித்து விடும். இந்த தீபத்தின் பெயரே கரதள சுரகல தீபமாகும். இந்த கரதள சுரகல தீபத்தை சாதாரண மக்களும் ஏற்றி வழிபடக் கூடிய ஒரே திருத்தலமே மயில்ரங்கம் திருத்தலமாகும்.
மயில்ரங்கம் திருத்தலத்தில் ஏற்றப்படும் ஜோதியின் மற்றோர் சிறப்பு என்ன வென்றால் ஏற்றப்படும் கரதள சுரகல தீபத்தில் அகலாக அருள்பவள் ஸ்ரீ மங்களாம்பிகை அதில் ஜோதியாகப் பிரகாசிப்பவரோ ஸ்ரீ மயூரநாதர் பெருமானாவார்.
எனவே சக்தியையும் சிவனையுமே ஒருவர் தன் கரதலத்தில் தாங்கும் பேறு கிட்டுமென்றால் இதைவிடச் சிறந்த ஒரு பேற்றை ஒரு சாதாரண கலியுக மனிதன் பெற முடியுமா
வழிபாட்டிற்குப் பின் இந்த பூவரசு இலைகளில் பருப்பு வடை தட்டி தானமாக அளிப்பதால் கிட்டும் பலன்கள் அமோகம், ஆச்சச்சரியம்
நாம் நினைத்த காரியம் வெற்றி பெற கர தள சுர கல தீப வழிபாடு.
மயில்ரெங்கம் மயூரநாதர் திரு ஸ்தலம் திருச்சி லால்குடி போகும் நெடுஞ்சாலையில் வாளாடியிலிருந்து சுமார் 4 கி.மீ.தொலைவில் உள்ளது...
இந்த ப்ரத்யேக வராஹ விநாயகரை வழிபட்டு அனைவரும் தங்கள் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம்..
அருள்தரும் ஆலயங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக