மார்வெல்
திரைப்படங்களில் ஆன்ட்-மேன் (Ant-Man) மற்றும் ஸ்பைடர்மேன் ஃபார் ஃபிரம் ஹோம்
திரைப்படங்கள் பார்த்தவர்களுக்கு பேரலெல் யூனிவெர்ஸ் என்றால் என்ன என்பது
தெளிவாகத் தெரிந்திருக்கும். பேரலெல் யூனிவெர்ஸ் என்பது பூமிக்கு இணையான மற்றொரு
பிரபஞ்சம் வேறொரு காலநிலையில் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பது தான். இப்படியான
பேரலெல் யூனிவெர்ஸ் இருப்பதற்கான ஆதாரம்தற்பொழுது அண்டார்டிகாவில்
கண்டறியப்பட்டுள்ளது.
அண்டார்டிக்காவில்
'ஃபோவுண்டைன் ஆஃப் ஹை-எனர்ஜி பார்டிகிள்ஸ்'
நாசா
விஞ்ஞானிகள் அண்டார்டிகாவில் நடத்திய ஒரு ஆராய்ச்சியன் போது, அண்டார்டிக்காவின்
"பனியிலிருந்து உயர் ஆற்றல் துகள்கள் அதிகளவில் வெடிப்பதை'' அந்த விஞ்ஞானிகள்
கண்டுபிடித்துள்ளனர். இந்த நிகழ்வை ஃபோவுண்டைன் ஆஃப் ஹை-எனர்ஜி பார்டிகிள்ஸ் என்று
விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். இந்த உயர் ஆற்றல் துகள்களின் சான்று ஒரு இணையான
பிரபஞ்சத்திற்குச் சான்றாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் குழு தற்பொழுது நம்பிக்கையுடன்
தெரிவித்துள்ளது.
பேரலெல்
யூனிவெர்ஸ் இருப்பதற்கான வாய்ப்பு
அண்டார்டிகா,
இதுவரை பல அமானுஷயமான மற்றும் விசித்திரமான பல மர்ம உண்மைகளை அடக்கி வைத்துள்ளது.
அந்த வரிசையில் இப்பொழுது பேரலெல் யூனிவெர்ஸ் இருப்பதற்கான சான்று கிடைத்துள்ளது
ஆச்சரியமாக இருக்கிறது என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த உயர் ஆற்றல்
துகள்கள் அதிகளவில் வெடிப்பதை நாசாவின் ANITA எனப்படும் அண்டார்டிக் இம்பல்சிவ்
ட்ரான்ஸியன்ட் ஆண்டெனா கண்டறிந்துள்ளது.
நாசாவின் ANITA ஆண்டெனா கண்டுபிடித்த
தகவல்
நாசாவால்
வடிவமைக்கப்பட்ட, அனிடா (ANITA ) ஆண்டெனா என்பது அண்டார்டிகா மீது பறக்கும் ஒரு
அடுக்கு மண்டல பலூன் பேலோட் ஆகும். இந்த அனிடா ஆண்டனாவின் முக்கிய நோக்கம்
ரேடியோ-அலை சிக்னல்கள் மூலம் அண்ட-கதிர் காற்று பொழிவைக் கண்டறிவது தான். இந்த
உயர் ஆற்றல் துகள்களை அனிடா ஆண்டெனா கண்டுபிடித்துள்ளது இது தான் முதல் முறை அல்ல
என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளார்.
உயர்
ஆற்றல் துகள்கள் பின்னணியில் உள்ள உண்மை
கடந்த
2006 ஆம் ஆண்டு மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் உயர் ஆற்றல் துகள்களின் 'ஃபோவுண்டைன்'
ரேடியோ அலை சிக்கனல்களை அனிடா ஆண்டெனா கண்டுபிடிப்பதில் வெற்றி பெற்றது, ஆனால்
நாசா விஞ்ஞானிகள் ஆரம்பத்தில் இந்த சிக்கனல்களை பின்னணி இரைச்சல் அல்லது எதோ
தொழில்நுட்ப குறைபாடு என்று தவறாகக் கருதியுள்ளனர். ஆனால், இப்பொழுது தான், இதன்
பின்னணியில் உள்ள உண்மையை விஞ்ஞானிகள் புரிந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
தலைகீழான காஸ்மிக்-ரே ஷவர்
முன்னணி
ஆராய்ச்சியாளரும் ஹவாய் பல்கலைக்கழக இயற்பியல் பேராசிரியருமான பீட்டர் கோர்ஹாம்
நியூஸ் ஹப் தொலைக்காட்சியின் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது இந்த தகவலைப் பகிர்ந்துள்ளார்.
நாசா ஆராய்ச்சியாளர்கள் இந்த உயர் ஆற்றல் துகள்களின் தரவை மிக நெருக்கமாக ஆய்வு
செய்தபோது, அதில் "தலைகீழான காஸ்மிக்-ரே ஷவர்" போன்ற நிகழ்வைக்
கண்டறிந்துள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை
கண்டிடாத மிகவும் விசித்திரமான நிகழ்வு
"ஆராய்ச்சியின்
போது நாங்கள் பார்த்தது, பனிக்கட்டியின் பிரதிபலிப்பில் காணப்பட்டதைப் போலவே ஒரு
அண்டக் கதிர் போலத் தோற்றமளித்தது, ஆனால், அது உண்மையில் பனிக்கட்டியிலிருந்து
பிரதிபலிக்கப்படவில்லை. காணப்பட்ட அண்டக் கதிர் அலைகள் பனியிலிருந்து வெளியே
வருவதைப் போல இருந்தது. இது இதுவரை கண்டிடாத மிகவும் விசித்திரமான விஷயம்,
"என்று பேராசிரியர் கோர்ஹாம் கூறியிருக்கிறார்.
பூமிக்கு
இணையான வேறு ஒரு பிரபஞ்சம்
ஆராய்ச்சியாளர்களின்
கூற்றுப்படி, இந்த ஆற்றல் துகள்கள் உண்மையில் காலப்போக்கில் பயணிக்கக்கூடியதாக
இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது, அதேபோல், இந்த உயர் ஆற்றல் துகள்கள் நம்மைப்
போலவே வேறு ஒரு இணையான பிரபஞ்சமும் இருப்பதைக் காட்டுகிறது என்று விஞ்ஞானிகள்
தெரிவித்துள்ளனர். இந்த துகள்களை மேலும் ஆராய்ச்சி செய்து பேரலெல் யூனிவெர்ஸ்
இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பேரலெல்
யூனிவெர்ஸிற்கு ஒத்தாக இருக்கும் ஆற்றல்
குறிப்பாக
இந்த நிகழ்வின் இயற்பியல் நிலையான விதிகள் அனைத்தும் தலைகீழாக பேரலெல்
யூனிவெர்ஸிற்கு ஒத்தாகச் செயல்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த
நிகழ்வு "சில புதிய வகை இயற்பியலின் அறிகுறியாக இருக்கலாம், இது இயற்பியலின்
நிலையான மாதிரியைத் தாண்டி செயல்படுகிறது" என்று பேராசிரியர் கோர்ஹாம்
கூறியுள்ளார்.
ஸ்டீபன் ஹாக்கிங் சொன்னது உண்மையானது
ஸ்டீபன்
ஹாக்கிங் சொன்னது உண்மை ஆகிவிட்டது, நம் பிரபஞ்சத்திற்கு அப்பால் ஒரு இணையான
யதார்த்தம் இருக்கிறது என்ற உண்மையை பெரும்பாலான மக்கள் இன்று வரை நிராகரித்து
வந்தனர். ஆனால், ஸ்டீபன் ஹாக்கிங் தனது "A Brief History of Time" என்ற
புத்தகத்தில், நம் பிரபஞ்சத்திற்கு அப்பால் இணையான பன்முகத்தன்மை இருப்பதற்கான ஒரு
கோட்பாட்டை விளக்கியிருந்தார்.
பேரலெல்
யூனிவெர்ஸ் - நாசா அடுத்தகட்ட ஆராய்ச்சி
ஸ்டீபன்
ஹாக்கிங் சொன்ன கூற்றுப்படி, பேரலெல் யூனிவெர்ஸ் இருப்பதற்கான வாய்ப்பு பூமியில்
உள்ளதென்று தற்பொழுது நாசாவின் கண்டுபிடிப்பு மூலம் உண்மையாகியுள்ளது. இதன் மூலம்
பேரலெல் யூனிவெர்ஸ் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்ற முதல் நம்பிக்கை தகவல்
தற்பொழுது வெளியாகியுள்ளது. நாசா அடுத்தகட்ட ஆராய்ச்சியை வெகுவிரைவில்
துவங்கவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக