பல வாரம் நீடித்து நிலைக்கும் அதிக ஆயுள் கொண்ட பேட்டரி திறனுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்படுகிறது என்று நோக்கியா நிறுவனம் வெளியிட்ட தகவல் உண்மை தானா? இந்த பியூச்சர் போன் ஒரு முறை சார்ஜ் செய்தால் 23.4 நாட்களுக்கு நீடித்த நிலைக்குமா? இதில் இன்னும் என்ன சிறப்பம்சங்கள் உள்ளது? இதன் விலை என்ன போன்ற முழு விபரங்களை இந்த பதிவில் நீங்கள் பார்க்கலாம்.
நோக்கியா 125 மற்றும் நோக்கியா 150
நோக்கியா 125 மற்றும் நோக்கியா 150 ஆகிய இரண்டு பியூச்சர் போன் மாடல்கள் பல மாதங்களுக்கு முன்பு வலைத்தளங்களில் காணப்பட்டது, இப்பொழுது அதிகாரப்பூர்வமாக அறிமுகத்திற்குத் தயாராகிவிட்டது. நோக்கியாவின் இந்த இரண்டு போன்களும் 2.4' இன்ச் கொண்ட டிஸ்பிளேயுடன் ஒரு வாரம் நீடித்து நிலைக்கும் அதிக ஆயுள் கொண்ட பேட்டரி திறனுடன் வருகிறது. அதேபோல், MP3 பிளேயர், கேமராவுடன் கூடிய பிளாஷ் மற்றும் வயர்லெஸ் ரேடியோவுடன் வருகிறது.
நோக்கியா 125 சிறப்பம்சம்
- 2.4' இன்ச் கொண்ட QVGA டிஸ்பிளே
- மெடிட்டெக் பிராசஸர்
- நோக்கியா சீரிஸ் 30+ இயங்குதளம்
- 4MB இன்டெர்னல் ஸ்டோரேஜ்
- VGA கேமரா சென்சார்
- வயர்லெஸ் FM ரேடியோ
- சிங்கள் சிம் / டூயல் சிம்
- மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட்
- 3.5 ஆடியோ ஜாக்
- 1020 எம்.ஏ.எச் பேட்டரி
- 2.4' இன்ச் கொண்ட QVGA டிஸ்பிளே
- மெடிட்டெக் பிராசஸர்
- நோக்கியா சீரிஸ் 30+ இயங்குதளம்
- 4MB இன்டெர்னல் ஸ்டோரேஜ்
- மைக்ரோ ஸ்லாட் ஸ்டோரேஜ் 32 ஜிபி வரை
- VGA கேமரா சென்சார்
- வயர்லெஸ் FM ரேடியோ
- சிங்கள் சிம் / டூயல் சிம்
- மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட்
- 3.5 ஆடியோ ஜாக்
- 1020 எம்.ஏ.எச் பேட்டரி
நோக்கியா 125 மற்றும் நோக்கியா 150 விலை விபரம்
நோக்கியா 125 பியூச்சர் போன் வைட் மற்றும் சார்க்கோள் பிளாக் ஆகிய இரண்டு நிறங்களில் தோராயமாக ரூ.1,800 என்று விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கிறோம். நோக்கியா 150 பியூச்சர் போன் ரெட், பிளாக் மற்றும் சியான் நிறங்களில் வெறும் ரூ.2,200 என்ற விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நோக்கியா சொன்னது உண்மை தான்
புதிய நோக்கியா 125 மற்றும் நோக்கியா 150 ஆகிய இந்த இரண்டு போன்களும் 23.4 நாட்கள் ஸ்டேன்பை மோடில் நீடித்து நிலைக்கும் என்று நோக்கியா அறிவித்துள்ளது. அதேபோல், இந்த இரண்டு பியூச்சர் போன்களும் சுமார் 19.4 மணிநேர டாக் டைம் பயன்பாட்டை வழங்கும் என்றும் நோக்கியா தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக