OTT இல் வெளியாகும் அனுஷ்காவின் நிசப்தம் திரில்லர் திரைப்படம்.
நிசப்தம் என்ற படம் ஒரு திரில்லர் கலந்த படமாகும். இந்த படத்தை ஹேமந்த் மதுகர் இயக்கியுள்ளார். இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ளார். அவருடன் இணைந்து நடிகர் மாதவன், அஞ்சலி, மைக்கேல் மேட்சன், சுப்புராஜ், ஷாலினி பாண்டே மற்றும் ஸ்ரீனிவாஸ் அவசரளா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இந்த படத்தை பீப்ள் மீடியா ஃபாக்ட்றி தயாரிக்கிறது.
மேலும் இந்த படத்தை தெலுங்கு ஆங்கிலம், தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை மிரள வைத்தது. தற்போது ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் பல பிரபலங்களின் படங்களை ஆன்லைனில் வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதில் முதற்கட்டமாக நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியாகவுள்ள பொன் மகள் வந்தாள் படத்தை OTT இல் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் தற்போது அனுஷ்காவின் நிசப்தம் படத்தையும் OTT platform ல் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம் இந்த படத்தையும் OTT பெரிய தொகையை கொடுத்து வாங்கியதாக கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக