கொரோனா ஊரடங்கு காலத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல்வேறு சேவைகளை வழங்குவது போல், டிடிஎச் நிறுவனங்களும் சில வசதிகளை செய்துள்ளது.
சந்தாதாரர்களுக்கு பல்வேறு வசதி
டிடிஎச் நிறுவனம் அதன் சந்தாதாரர்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. அதன்படி வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையானவற்றை தேர்வு செய்து கொள்ள முடிகிறது.
பிரபலமான DTH நிறுவனங்களான Tata sky, D2H, DishTV
பிரபலமான DTH நிறுவனங்களான Tata sky, D2H, DishTV போன்ற DTH நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான பல்வேறு திட்டங்களையும் சேனல்களையும் வழங்கி வருகிறது.
தங்களது வாடிக்கையாளர்களின் தேவையை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு ஏற்ப வசதியை அடிப்படையாகக் கொண்டு டிடிஹெச் திட்டங்கள் உள்ளிட்ட தொகுப்புகளை வழங்கப்பட்டு வருகிறது.
கூடுதல் தொகுப்புகளையும் வழங்குகிறது
டிடிஎச் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை பூர்த்தி செய்வதற்கென கூடுதல் தொகுப்புகளையும் வழங்குகிறது. இந்த திட்டங்களில் பிராந்திய பொதிகள், க்யூரேட்டட் பொதிகள் போன்ற சில சேவைகளை தேர்வு செய்வது அதன் சிறப்புகளில் ஒன்றாக உள்ளது.
கொரோனா தொற்று பரவல் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது
இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் அந்தந்த நாட்டு அரசு எடுத்து வருகிறது.
இதன் முக்கிய நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டு வருகிறது.
பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்
கொரோனா ஊரடங்கின் காரணமாக அனைத்து கடைகளும், தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
இதையடுத்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது அதேபோல் டிடிஎச் நிறுவனங்கள் சில வசதிகளை வழங்கியுள்ளன.
பே லேட்டர் எனும் சேவை
டிஷ் டிவி முன்பாகவே அனைத்து பயனர்களுக்கும் பே லேட்டர் எனும் சேவையை வழங்கி வருகிறது. ஆனால் கொரோனா ஊரடங்கு காலத்தி் வாடிக்கையாளர்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் சேவை பெறுவதற்கு டிடிஎச் நிறுவனங்கள் தகுந்த வசதிகளை செய்து வருகின்றன.
இதையடுத்து டிஷ் டிவி உடனடி கடன் சேவையை வழங்குகிறது. கடன் பெற விரும்பும் சந்தாதாரர்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 1800-274-9050 என்ற எண்ணில் மிஸ்டு கால் கொடுத்து, அவர்களின் கணக்குகளில் உடனடி கடன் பெறலாம்.
டி2எச் நிறுவனம், தங்களது சந்தாதாரர்களுக்கு உடனடி கடன் வசதி
டி2எச் நிறுவனம், தங்களது சந்தாதாரர்களுக்கு உடனடி கடன் வசதியை வழங்குகிறது. இதில் சில சிக்கல்களும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதாவது உடனடி கடன் வசதியில் d2h ஒரு சேவை கட்டணத்தையும் உள்ளடக்கியுள்ளது. எனவே டி2எச் உடனடி கடன் வசதியைத் தேர்வுசெய்யும் சந்தாதாரர்கள் பின்னர் கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Emergency Free Credit Facility
அதேபோல் டாடா ஸ்கை நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு அவசர இலவச கடன் வசதியை (emergency free credit facility) வழங்குவதாக அறிவித்துள்ளது. இதற்கு முன்பு டாடா ஸ்கை நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதன் தனது ஃபிட்னஸ் சேனலை இலவசமாக வழங்குவதாக அறிவித்த கையோடு இந்த நடவடிக்கையை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் கடன் தொகை
அவசர கடன் சேவையைத் தேர்வுசெய்யும் கூடுதல் கடன் தொகையை பின்னர் செலுத்த வேண்டும். இதற்கு எந்தவித சேவைக் கட்டணத்தையும் வழங்கவில்லை.
டாடா ஸ்கை நிறுவன சந்தாதாரர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 080-61999922 இந்த எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து சேவை பெறலாம்.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக