Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 12 மே, 2020

இந்த பிரபலமான Vodafone பிளான் மீது ரூ.100 விலையேற்றம்; பயனர்கள் ஷாக்!

Vodafone RedX


வோடபோன் நிறுவனம் அதன் பிரீமியம் போஸ்ட்பெய்ட் திட்டத்தின் ரென்டல் விலையை அதிகரித்துள்ளது. வோடாபோன் நிறுவனத்தின் RED தொடரின் கீழ் கிடைக்கும் மிகவும் பிரபலமான போஸ்ட்பெய்ட் திட்டமான Vodafone RedX இப்போது ரூ.1,099 க்கு அணுக கிடைக்கிறது.
இதன் அசல் வெளியீட்டு விலை ரூ.999 ஆகும். ஆக இந்த பிளான் தோராயமாக 10 சதவீத விலை உயர்வை, அதாவது ரூ.100 என்கிற விலை உயர்வை பெற்றுள்ளது.

விலை உயர்த்தப்பட்டாலும் கூட திட்டத்தின் நன்மைகள் அப்படியே தான் உள்ளன. வோடாபோனின் மற்ற ரெட் திட்டங்கள் எதுவும் தற்போது வரையிலாக எந்தவிதமான விலை மாற்றத்தையும் காணவில்லை, அவைகள் வழக்கம்போல மாதத்திற்கு ரூ.399 முதல் என்று வோடபோனின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.

வோடபோன் ரெட்எக்ஸ் திட்டம் தான் நிறுவனத்தின் வழக்கமான வாடிக்கையாளர்களுக்கான போஸ்ட்பெய்ட் போர்ட்ஃபோலியோவில் மிகவும் விலை உயர்ந்த ஒரு திட்டமாகும்.

நன்மைகளை பொறுத்தவரை இது வரம்பற்ற மொபைல் டேட்டா பயன்பாட்டை வழங்குகிறது மற்றும் இது இந்தியாவில் உள்ள அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தேசிய ரோமிங் மற்றும் மாதத்திற்கு 100 எஸ்எம்எஸ் போன்றவைகளை வழங்குகிறது.

தவிர ஒரு வருட நெட்ஃபிக்ஸ், தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலைய ஓய்வகங்களுக்கான அணுகல், தேர்தெடுக்கப்பட்ட நாடுகளுக்கு சிறப்பு விலையின் கீழ் .எஸ்.டி அழைப்புகள் போன்ற கூடுதல் நன்மைகளையும் வழங்குகிறது.


வோடபோன் ரெட்எக்ஸ் திட்டத்தின் அதிகரித்த விலையானது புதிய சந்தாதாரர்களுக்கு மட்டுமே பொருந்துமா அல்லது ஏற்கனவே சேவையில் இருக்கும் சந்தாதாரர்களுக்கும் பொருந்துமா என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

வோடபோன் ஐடியா லிமிடெட் சமீபத்தில் ஐடியா நிர்வாணா போஸ்ட்பெய்ட் திட்டங்களில் இருந்த அதன் போஸ்ட்பெய்ட் சந்தாதாரர்கள் அனைவரையும் வோடபோன் ரெட் பேனரின் கீழ் கொண்டு வந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் கடந்த 2018 ஆம் ஆண்டில் ஒன்றிணைந்து நாட்டின் மிகப்பெரிய மொபைல் ஆபரேட்டராக உருமாறியது. இருப்பினும் தற்போது வரையிலாக ஏர்டெல் மற்றும் ஜியோவை விட பின்தங்கியிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக